Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

டோக்கியோ ஒலிம்பிக் தொடர்...பிரபல வீரர் மாயம்

Advertiesment
டோக்கியோ ஒலிம்பிக் தொடர்...பிரபல வீரர் மாயம்
, சனி, 17 ஜூலை 2021 (16:20 IST)
ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொள்ள  சென்ற உகாண்ட நாடு வீரர் ஒருவர் மாயமாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இந்த வருடம் ஒலிம்பிக் போட்டிகள் நடக்க உள்ளன. ஜப்பானில் இப்போது மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் போட்டிகளைப் பார்ப்பதற்கு வெளிநாட்டு ரசிகர்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் இப்போது கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் ஒலிம்பிக் தொடரை ரத்து செய்யவேண்டும் என எதிர்ப்புக்குரல்கள் எழுந்துள்ளன. இதற்கான கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. அதில் இதுவரை 3. 5 லட்சம் பேர் கையெழுத்திட்டுள்ளனர். ஆனாலும் பாதுகாப்பாக ஒலிம்பிக் போட்டிகள் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொள்ள இருந்த 6 தடகள வீரர்கள் உள்ளிட்டவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் ஒலிம்பிக் போட்டிகள் திட்டமிட்டபடி நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில் ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ளச் சென்ற உகாண்ட நாட்டு பளுதூக்கும் வீரர் ஜூலியஸ் செகிடோலெக்கோ என்பவர் ஜப்பானில் ஒசாகாவில் உள்ள இசுமிசானோ என்ற இடத்தில் தங்கி பயிற்சியில் ஈடுபட்டிருந்தார்.  அப்போது அவர் காணாமல் போனதாக தகவல் வெளியாகிறது. அவர் ஜப்பானில் தங்கி வேலை செய்யவுள்ளதாக ஒருகடிதம் எழுதிவைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நிறுத்தப்படுமா ஒலிம்பிக் ? டோக்கியோ கிராமத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று!