Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டி20 உலக கோப்பை கிரிக்கெட்: முதல் அரைஇறுதியில் பாகிஸ்தான்- நியூசிலாந்து

Webdunia
புதன், 9 நவம்பர் 2022 (08:39 IST)
டி20 உலக கோப்பை கிரிக்கெட்: முதல் அரைஇறுதியில் பாகிஸ்தான்- நியூசிலாந்து
கடந்த சில நாட்களாக இந்தியா உள்பட 12 நாடுகள் கலந்துகொண்ட உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வந்தன என்பது தெரிந்ததே. இந்த நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் குரூப்-1 பிரிவிலும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் குரூப் 2 பிரிவிலும் அரையிறுதிக்கு தகுதி பெற்றன
 
இந்த நிலையில் இன்று நியூஸிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது அரையிறுதி போட்டி நடைபெற உள்ளது. சிட்னி மைதானத்தில் இன்று நடைபெறும் இந்த போட்டி மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதும் இந்த போட்டியில் வெல்லும் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியும் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும் இன்றைய போட்டியில் வெல்வதற்கு மிகவும் தீவிரமாக முயற்சி செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது
 
பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் இதுவரை டி20 கிரிக்கெட் போட்டிகளில் 28 போட்டிகளில் விளையாடி உள்ளன என்பதும் இதில் 11 போட்டிகளில் நியூசிலாந்தும் 17 போட்டிகளில் பாகிஸ்தான் வெற்றி பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்தநிலையில் நாளை இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது அரையிறுதி போட்டி நடைபெறும்
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜெய்ஸ்வால் செய்த சாதனை.. சச்சின், டிராவிட், சேவாக் பட்டியலில் இடம்..!

‘ஓடிப்போய் கல்யாணம் பண்ணிக்கலாமா’ எனக் கேட்ட பும்ரா – சஞ்சனாவின் ‘தக்’ பதில்!

சிராஜ் அபார பவுலிங்… முதல் இன்னிங்ஸில் இந்தியா 180 ரன்கள் முன்னிலை!

பாகிஸ்தானை அடுத்து இனி வங்கதேசத்திற்கும் இந்திய கிரிக்கெட் அணி செல்லாதா? பரபரப்பு தகவல்..!

5 விக்கெட்டுக்களை இழந்தாலும் ஸ்மித், புரூக் அபார ஆட்டம்.. இங்கிலாந்து ஸ்கோர் விபரங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments