Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் தொடரில் இன்று முதல் இரண்டாவது சுற்று: சென்னை-ஐதராபாத் மோதல்

Webdunia
செவ்வாய், 13 அக்டோபர் 2020 (09:59 IST)
ஐபிஎல் தொடரில் இன்று முதல் இரண்டாவது சுற்று: சென்னை-ஐதராபாத் மோதல்
ஐபிஎல் போட்டி கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் ஒவ்வொரு அணியும் முதல் சுற்றில் மற்ற ஏழு அணிகளுடன் மோதி முடிந்துவிட்டன, முதல் சுற்றின் முடிவில் மும்பை அணி 10 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. டெல்லி மற்றும் பெங்களூரு அணிகளும் 10 புள்ளிகள் பெற்று இருந்தாலும் ரன்ரேட் அடிப்படையில் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களை பிடித்துள்ளன 
 
கொல்கத்தா நான்காவது இடத்திலும், ஹைதராபாத் ஐந்தாவது இடத்திலும், ராஜஸ்தான் ஆறாவது இடத்திலும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 7 போட்டிகளில் விளையாடி 5 போட்டிகளில் தோல்விகள் மற்றும் இரண்டு வெற்றிகளை மட்டுமே பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7-வது இடத்திலும், 7 போட்டிகளில் விளையாடி ஒரு வெற்றியை மட்டுமே பெற்ற பஞ்சாப் அணி 8வது இடத்திலும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் தற்போது இரண்டாம் சுற்று இன்று முதல் தொடங்க உள்ளது. இரண்டாம் சுற்றின் முதல் போட்டியில் சென்னை மற்றும் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. துபாயில் நடைபெறும் இந்தப் போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றால் மட்டுமே முதல் 4 இடங்களைப் பிடித்து பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற முடியும் 
 
கடந்த சில போட்டிகளாக தோனி உள்பட சென்னை அணி வீரர்கள் மிக மோசமாக விளையாடி வரும் நிலையில் இன்றைய போட்டியில் சென்னை அணி மீண்டு வர வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்

தொடர்புடைய செய்திகள்

18 ரன்கள்.. 18 ஓவர்.. 18ம் தேதி.. 18ம் ஜெர்சி! 18க்குள்ள இவ்ளோ விஷயம் இருக்கா? – வரலாறு காணாத CSK vs RCB போட்டிக்கு தயாரா?

வலைப்பயிற்சியில் ஆச்சர்யப்படுத்திய தோனி… ஆர் சி பி அணிக்கு எதிரான போட்டிக்கு 100 சதவீதம் தயார்!

தோனி இன்னும் இரண்டு ஆண்டுகள் விளையாடுவார்… முன்னாள் சி எஸ் கே வீரர் நம்பிக்கை!

எளிதாக ப்ளே ஆஃப் சென்ற SRH… ஆர் சி பி& சி எஸ் கே அணிகளுக்கு வாழ்வா சாவா போட்டி!

கைவிடப்பட்ட போட்டி… எளிதாக ப்ளே ஆஃப்க்கு தகுதி பெற்ற ஐதராபாத்!

அடுத்த கட்டுரையில்
Show comments