Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வினேஷ் போகத் தகுதி நீக்கத்தில் மாற்றமில்லை..! சர்வதேச ஒலிம்பிக் சங்கம் திட்டவட்டம்..!!

Senthil Velan
புதன், 7 ஆகஸ்ட் 2024 (17:41 IST)
வினேஷ் போகத் தகுதி  நீக்க விவகாரத்தில் எந்த மாற்றமும் இல்லை என்று சர்வதேச ஒலிம்பிக் சங்கம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
 
ஒலிம்பிக் மல்யுத்தத்தில் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய வினேஷ் போகத், உடல் எடையை காரணம் காட்டி தகுதி நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தங்கப்பதக்கம் வெல்ல வேண்டும் என்ற வினேஷ் போகத்தின் கனவு தகர்ந்தது.
 
வினேஷ் போகத் தகுதி நீக்கம் தொடர்பாக ஒலிம்பிக் கமிட்டி தலைவரிடம் பிரதமர் மோடி பேசியதாக தகவல் வெளியானது. மீண்டும் அவருக்கு வாய்ப்பு அளிக்கப்படுமா என்று அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில், வினேஷ் போகத் தகுதி  நீக்க விவகாரத்தில் எந்த மாற்றமும் இல்லை என்று சர்வதேச ஒலிம்பிக் சங்கம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

ALSO READ: நீங்கள் தான் உண்மையான சாம்பியன்.! வினேஷ் போகத்தை புகழ்ந்து தள்ளிய முதல்வர் ஸ்டாலின்..!!
 
100 கிராம் டைக்காக வினேஷ் போகத்தை அனுமதித்தால் மற்றவர்களுக்கு அனுமதி வழங்க வேண்டி இருக்கும் என்று கூறியுள்ளது. மேலும் போட்டிக்கான விதி என்பது அனைவருக்கும் ஒரே மாதிரி தான் என்று சர்வதேச ஒலிம்பிக் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: டாஸ் வென்ற இந்தியா அதிரடி முடிவு..!

சொந்த மண்ணில் விளையாடுவதால் அழுத்தம் இருக்கும்… ஆஸி கேப்டன் பேட் கம்மின்ஸ் பதில்!

முதல் டெஸ்ட்டில் நிதீஷ் குமாருக்கு வாய்ப்பு… பவுலிங் பயிற்சியாளர் பகிர்ந்த தகவல்!

மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி: 3-வது முறையாக சாம்பியன் ஆனது இந்தியா..!

கோலியைக் கொண்டாடும் ஆஸி ஊடகங்கள்.. ஆனால் உளவியல் ரீதியாகத் தாக்கும் ஆஸி வீரர்கள்…!

அடுத்த கட்டுரையில்
Show comments