பிசிசிஐ ரூ. 51 கோடி நிதி உதவி… நெட்டிசன்ஸ் விளாசல்
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் 743 ல் இருந்து 748 ஆக அதிகரித்துள்ளது. இதில், 66 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 19 பேர் உயிரிழந்துள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இந்தியாவில் ஊரடங்கு வரும் ஏப்ரல் 14 ஆம் தேதிவரை அமலில் உள்ளது. அதனால் மக்கள் அவரவர் வீடுகளில் உள்ளனர்.
தினக்கூலிகளாக உள்ள மக்கள் மற்றும் அதிக அளவில் பணியில் ஈடுபடும் கட்டிய தொழிலாளர்கள், குழந்தைகள் போன்றவர்கள் உணவுக்கு கஷ்டப்படும்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் மக்களின் பசி பட்டிணியையும் , வேலையில்லாத தொழிலாளர்களின் நிலைமையைச் சமாளிக்கும் வகையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பல நல்ல முக்கிய திட்டங்களை அறிவித்துள்ளார்.
இந்நிலையில் ஏராளமான சினிமா நட்சத்திரங்கள் மற்றும் விளையாட்டு பிரபலங்கள் நிவாரண பொருட்களும் நிதி உதவியும் செய்து வருகின்றனர்.
இன்று மாலை நாட்டில் பாரம்பரியமுள்ள முன்னணி நிறுவனமான டாடா குழுமத்தின் தலைவர் ரத்தன் டாட்டா கொரோனா தடுப்பு நிதிக்காக ரூ. 500 கோடி கொடுத்தார். அதன்பின்னர், பிரதமர் தாராளமாக நிதி உதவி அளிக்கலாமெனெ வேண்டிக்கொண்ட பின், மேலும், ரத்தன் டாடா மேல் ரூ. 1000 கோடி நிதி உதவி அளித்தார்.
இந்நிலையில், பிரபல இந்திய கிரிக்கெட் வாரியம் எனப்படும் பிசிசிஐ உலகில் மிகவும் பணக்கார அமைப்பாக உள்ளது. இந்நிறுவனம் கொரோனா தடுப்பு நிதியாக ரூ. 51 கோடி தரவுள்ளதாக அதன் தலைவர் முன்னாள் கிரிக்கெட் வீரர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
ஆனால், உலகில் மிகவும் பணக்கார அமைப்பாக உள்ள கிரிக்கெட் அமைப்பு ரூ. 51 கோடிகள் கொடுத்துள்ளதற்கு நெட்டிசன்கள் ஷேம் பிசிசிஐ (Shame bbci )என்ற ஹேஸ்டேக் உருவாக்கி டிரெண்டிங் செய்து வருகின்றனர்.