Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் மைதானத்தில் நிறவெறி தாக்குதல் பேச்சு – பந்துவீசுவதை நிறுத்திய இந்திய அணி!

Webdunia
ஞாயிறு, 10 ஜனவரி 2021 (13:36 IST)
இந்திய வீரர்களான பூம்ரா மற்றும் சிராஜ் ஆகியோரை நிற ரீதியாக தாக்கி பேசிய பார்வையாளர்களால் மைதானத்தில் சலசலப்பு உருவானது.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே இப்போது சிட்னியில் நடந்து வரும் டெஸ்ட் போட்டியில் நிறவெறி தாக்குதல் பேச்சுகள் எழுந்துள்ளன. நேற்று மைதானத்தில் பீல்ட் செய்து கொண்டிருந்த சிராஜை சில பார்வையாளர்கள் நிற ரீதியாக தாக்கி பேசியுள்ளனர். இதுகுறித்து போட்டி முடிந்ததும் நடுவர்களிடம் புகார் அளிக்கப்பட்டது.

ஆனால் இன்றும் மீண்டும் அதுபோல சிலர் சிராஜ் மற்றும் பூம்ரா ஆகியோரை நிற ரீதியாக தாக்கிப் பேசியுள்ளனர். இதையடுத்து இந்திய அணி வீரர்கள் பந்துவீசுவதை நிறுத்திவிட்டு நடுவரிடம் புகாரளித்தனர். இதையடுத்து அவ்வாறு பேசிய 6 பேர் மைதானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர். அதன் பின்னரே இந்திய வீரர்கள் பந்துவீசினர்.

இதுகுறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் இந்திய அணியிடம் மன்னிப்புக் கேட்டுள்ளது. அவ்வாறு பேசிய ஆறு பேரும் நிரந்தரமாக கிரிக்கெட் அரங்குக்குள் நுழைய முடியாத படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிரடி காட்டிய பும்ரா! 54 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோவை அமுக்கிய மும்பை! - இரண்டாம் இடத்தில் மாஸ்!

300 சிக்ஸர்கள் சாதனையை தவறவிட்ட ரோஹித் சர்மா.. அடுத்த போட்டியில் நிகழ்த்துவாரா?

ஐபிஎல்ல 300 ரன் அடிக்கிறது அவ்ளோ கஷ்டம் இல்ல..! - ரிங்கு சிங் கருத்து!

டேபிள் டாப்பர்ஸ் மோதல்.. இன்று பரபரப்பான 2 போட்டிகள்! MI vs LSG மற்றும் RCB vs DC போட்டி எப்படி இருக்கும்?

பஞ்சாப் - கொல்கத்தா போட்டி மழையால் ரத்து.. தலா ஒரு புள்ளி கொடுத்தபின் புள்ளி பட்டியல் நிலவரம் என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments