Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நியுசிலாந்து அணியின் பேட்டிங் வலுவாக இல்லை… ஆப்கனுக்கு சாதகம் – அஜித் அகார்கர் கருத்து!

Webdunia
சனி, 6 நவம்பர் 2021 (17:45 IST)
நியுசிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே நாளைக்கு நடக்கும் போட்டியை இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆர்வமாக எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

நேற்று ஸ்காட்லாந்து அணியை இந்தியா 7 ஓவர்களில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில் ரன்ரேட் உயர்ந்துள்ளது. இதனால் ஆப்கானிஸ்தானுக்கு முன்னால் நாம் உள்ளோம். இந்நிலையில் இந்திய அணி அரையிறுதிக்கு செல்ல ஒரே ஒரு வாய்ப்புதான் உள்ளது. அது என்னவென்றால் ஆப்கானிஸ்தான் மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையே 7 ஆம் தேதி நடக்கும் போட்டியில் ஆப்கான் அணி வெற்றி பெற வேண்டும்.

அப்படி ஒருவேளை வெற்றி பெற்று விட்டால் இந்தியா நமீபியாவை வெற்றி பெற்றதும் இந்தியா, நியுசிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய மூன்று அணிகளும் 6 புள்ளிகளோடு இருக்கும். அப்போது இந்திய அணியின் ரன்ரேட் அடிப்படையில் இந்தியா அரையிறுதிக்கு செல்லும். இதனால் நியுசிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் போட்டியை இந்திய ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்த்துக் காத்துக்கொண்டு இருக்கின்றனர்.

இந்நிலையில் ஆப்கானிஸ்தானுக்கு நியுசிலாந்தை வெற்றி பெற இருக்கும் சாதகமான அம்சம் குறித்து அஜித் அகார்கர் பேசியுள்ளார். அதில் ‘நியுசிலாந்து அணியிடம் வலுவான பேட்டிங் இல்லாதது ஆப்கானிஸ்தானுக்கு சாதகமான அம்சமாக உள்ளது’ எனக் கூறியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிஎஸ்கே அணியின் ஏலத்தில் வாங்கப்பட்ட வீரர்கள் மற்றும் தக்கவைக்கப்பட்ட வீரர்கள்.. முழு விவரங்கள்

அணி தேர்வில் கோலி அதிருப்தியா?... பெங்களூர் அணி இயக்குனர் சொன்ன பதில்!

சிராஜை அணியில் எடுக்க முடியாமல் போகக் காரணம் இதுதான்… தினேஷ் கார்த்திக் பதில்!

வயதை குறைத்து சொல்லி ஏமாற்றினாரா வைபவ் சூர்யவன்ஷி?... தந்தை ஆவேசம்!

ஆஸ்திரேலியா தொடருக்கு நடுவே திடீரென இந்தியா திரும்பிய கம்பீர்!

அடுத்த கட்டுரையில்
Show comments