Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மொயின் அலி ஐஎஸ்ஐஎஸ் –ல் சேர்ந்திருப்பார்…. தஸ்லிமா நஸ்ரின் கருத்தால் சர்ச்சை!

Advertiesment
மொயின் அலி ஐஎஸ்ஐஎஸ் –ல் சேர்ந்திருப்பார்…. தஸ்லிமா நஸ்ரின் கருத்தால் சர்ச்சை!
, புதன், 7 ஏப்ரல் 2021 (13:26 IST)
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் மொயின் அலி பற்றி எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் மொயின் அலி இந்தாண்டு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட உள்ளார். இந்நிலையில் அவருக்கான ஜெர்ஸியில் மதுபான நிறுவனங்களின் லோகா மற்றும் விளம்பரம் இடம்பெற வேண்டாம் என அவர் கோரிக்கை வைத்ததாகவும், அதை அணி நிர்வாகம் ஏற்றுக்கொண்டதாகவும் செய்திகள் வெளியாகின. ஆனால் அது உண்மையில்லை என சிஎஸ்கே நிர்வாகம் அறிவித்தது.

இந்நிலையில் மொயின் அலி குறித்து டிவீட் செய்த எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் ‘மொயின் அலி கிரிக்கெட்டில் சேராமல் இருந்திருந்தால், அவர் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பில் சேர்ந்திருப்பார்.’ எனக் கூறியிருந்தார். இந்த டீவிட்டுக்குப் பலரும் கண்டனம் தெரிவித்தனர். அதையடித்து தஸ்லீமா ‘வெறுப்பாளர்களுக்கு தெரியும் என்னுடைய டிவிட் பகடியானது என்று. ஆனால் அவர்கள் அதை பெரிதாக சர்ச்சையாக்குகிறார்கள். ஏனென்றால் நான் இஸ்லாமிய சமூதாயத்தை பாதுகாக்கவும், இஸ்லாமிய அடிப்படைவாதத்தை எதிர்ப்பதாலும், மனித குலத்தின் முரண்களில் ஒன்று பெண் இடதுசாரிகள் கூட பெண்கள் விரோத இஸ்லாமியவாதிகளை ஆதரிப்பது’ எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பெங்களூரு அணியின் முக்கிய வீரருக்கு கொரோனா தொற்று உறுதி!