Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடைசி ஓவர் ஹீரோ நடராஜனுக்கு சுரேஷ் ரெய்னா பாராட்டு!

Webdunia
திங்கள், 29 மார்ச் 2021 (08:01 IST)
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் கடைசி ஓவரில் 14 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை இங்கிலாந்து அணிக்கு இருந்தது 
 
இங்கிலாந்து அணியின் சாம் கர்ரன் மிக அபாரமாக விளையாடி கொண்டிருந்ததால் 14 ரன்களை அவர் எடுத்து விடுவார் என்றே அனைவரும் நினைத்தனர். ஆனால் கடைசி வரை தமிழகத்தின் யார்க்கர் கிங் நடராஜன் வீச வந்தார். அவருக்கு சில அறிவுரைகளை விராட் கோலியும் புவனேஷ் குமாரும் கொடுத்தனர்
 
இதனை அடுத்து அடுத்தடுத்த பந்துகளில் யார்க்கர்களாக வீசி அந்த ஓவரில் வெறும் 4 ரன்கள் மட்டுமே நடராஜன் கொடுத்தார் அதுமட்டுமின்றி அந்த ஓவரில் ஒரு ரன் அவுட் விக்கெட் விழுந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து நடராஜன் வீசிய அசத்தலான கடைசி ஓவரால் இந்திய அணி வெற்றி பெற்றது என்பதும் தொடரை வென்றது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இதனை அடுத்து ஒரே ஒரு ஓவரில் நடராஜன் ஹீரோவாகி விட்டதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரும் சிஎஸ்கே அணியின் வீரர்களில் ஒருவரான சுரேஷ் ரெய்னா நடராஜனுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். யார்க்கர்களை நடராஜன் சிறப்பாக வீசினார் என்றும், அவருக்கு எனது பாராட்டுகள் என்றும் இளைஞர்கள் சரியான வழியில் சென்று கொண்டிருக்கிறார்கள் என்றும் அவர் தனது டுவிட்டரில் கூறியுள்ளார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாஷிங்டன் சுந்தருக்கு இம்பேக்ட் ப்ளேயர் விருது கொடுத்த கௌரவித்த பிசிசிஐ!

எதிர்காலம் என்ன?... கோலி மற்றும் ரோஹித் ஷர்மாவை பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் பிசிசிஐ!

‘ஆண்டர்சன்-டெண்டுல்கர்’ தொடரின் சிறந்த அணி… ஷுப்மன் கில்லுக்கு இடமில்லையா?

இந்திய அணிக்கு நல்ல செய்தி… ஆசியக் கோப்பை தொடருக்குக் கேப்டன் இவர்தானாம்!

சிலருக்கு என்னால் என்ன செய்யமுடியும் எனக் காட்ட விரும்பினேன்… புதுப் பந்து எடுக்காதது குறித்து சிராஜ் பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments