Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா தடுப்பு நிதி: ரூ.52 லட்சம் கொடுத்த ‘சின்னத்தல’

Webdunia
ஞாயிறு, 29 மார்ச் 2020 (15:31 IST)
கொரோனா தடுப்பு நிதி: ரூ.51 லட்சம் கொடுத்த ‘சின்னத்தல’
கடந்த சில நாட்களாக இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பரவலாக மிக வேகமாக தாக்கி வரும் நிறுவனம் கொரோனா வைரஸ் எதிரான தடுப்பு நடவடிக்கைகளுக்கு தாராளமாக நிதி வழங்க வேண்டும் என பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நேற்று கோரிக்கை விடுத்திருந்தார்
 
இதனை அடுத்து டாட்டா நிறுவனம் 1,500 கோடி, நடிகர் அக்ஷய்குமார் 25 கோடி, என பலர் கோடி கணக்கில் லட்சக்கணக்கில் கொரோனா தடுப்பு நிதியாக அளித்து வருகின்றனர்
 
இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரரும், ரசிகர்களால் சின்ன தல என்று அன்போடு அழைக்கப்படுபவருமான சுரேஷ் ரெய்னா தனது பங்காக ரூபாய் 52 லட்சத்துக்கு கொரோனா தடுப்பு பணிக்காக வழங்கி உள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: கொரோனாவுக்கு எதிராக நாம் ஒன்றினைந்து போராட வேண்டிய நேரமிது. இதில் என்னுடைய பங்களிப்பாக ரூ.52 லட்சம் தருகிறேன். இதில் ரூ.31 லட்சம் பிரதமர் நிவாரணநிதிக்கும், ரூ.21 லட்சம் உத்தரப் பிரசேத மாநில முதல்வர் நிவாரண நிதிக்கும் கொடுக்கிறேன். நீங்களும் உங்களால் முயன்றதை கொடுங்கள். என தெரிவித்துள்ளார்.
 
ஏற்கனவே பிசிசிஐ, சச்சின் தெண்டுல்கர் உள்பட விளையாட்டு உலகில் இருந்து லட்சக்கணக்கில் கொரோனா தடுப்பு நிதியாக கொடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் வரலாற்றில் முதல்முறை.. 13 வயது சிறுவனை ஏலத்தில் எடுத்த அணி..!

மீண்டும் சிஎஸ்கே அணியில் ‘சுட்டி குழந்தை’ சாம் கரண்: ரூ. 2.4 கோடிக்கு ஏலம்..!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியல்… மீண்டும் முதலிடத்துக்கு சென்ற இந்தியா!

கோலி ஃபார்முக்கு திரும்பிவிட்டாரா?... பும்ரா அளித்த நச் பதில்!

என்னை அவர்தான் வழிநடத்தினார்… ஜெய்ஸ்வால் நெகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments