Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோசமான பேட்டிங்: தோனியை விளாசிய கவாஸ்கர்!

Webdunia
வெள்ளி, 28 செப்டம்பர் 2018 (21:17 IST)
முன்னாள் இந்திய அணி கேப்டன் தோனி டெஸ்ட் போட்டிகளில் ஓய்வை அறிவித்து தற்போது ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடி வருகிறார். 
 
மேட்ச்வின்னர், கேம் சேஞ்சர் என ரசிகர்களால் அழைக்கபப்டும் தோனி சமீப காலத்தில் சிறப்பாக செயல்படாமல் இருப்பது அவர்கள் ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 
 
இன்னும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு 6 மாதங்களே உள்ள நிலையில், தோனி பேட்டிங் பார்மையும், ரன் குவிக்கும் திறமையையும் மேம்படுத்தும் கட்டாயத்தில் உள்ளார்.
 
இது குறித்து சுனில் கவாஸ்கர் பேசியுள்ளார், அவர் கூறியுள்ளது பின்வருமாறு, தோனியின் பேட்டிங் ஃபார்ம் கடந்த சில மாதங்களாக மிகவும் மோசமாக உள்லது. ஒரு நாள் போட்டிகளில் அவரின் ரன் குவிக்கும் வேகம், திறமை மழுங்கி வருகிறது. 
 
இங்கிலாந்து தொடரிலும், ஆசியக் கோப்பையிலும் ரசிகர்கள் அவர் வழக்கத்துக்கு மாறாக விளையாடினார். ஐபிஎல் தொடரில் சிறப்பாக பேட் செய்து ரசிகர்களின் கண்களுக்கு விருந்தளித்த தோனி, ஒருநாள் போட்டிகளில் ஜொலிக்க முடியாதது ஏன். 
 
உள்நாட்டுப் போட்டிகளில் தோனி அதிகமாக விளையாடுவதில் கவனம் செலுத்த வேண்டும். எதிர்வரும் உலகக்கோப்பையை மனதில் வைத்து தோனி தனது பேட்டிங்கில் கவனத்தை செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியாவுக்கு 4 ஆண்டு தடை! என்ன காரணம்?

பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டுக்கு ஊக்கத்தொகை… சமாதானப்படுத்த முயலும் ஐசிசி!

சிஎஸ்கே அணியின் ஏலத்தில் வாங்கப்பட்ட வீரர்கள் மற்றும் தக்கவைக்கப்பட்ட வீரர்கள்.. முழு விவரங்கள்

அணி தேர்வில் கோலி அதிருப்தியா?... பெங்களூர் அணி இயக்குனர் சொன்ன பதில்!

சிராஜை அணியில் எடுக்க முடியாமல் போகக் காரணம் இதுதான்… தினேஷ் கார்த்திக் பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments