இந்திய அணியில் இடம்பெற்றுள்ள குருணாள் பாண்ட்யாவை ஒரு முழு நேர பந்துவீச்சாளராக ஏற்றுக்கொள்ள முடியாது என சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில் இமாலய இலக்கான 337 ரன்களை 43 ஓவர்களிலேயே இங்கிலாந்து அடைந்து வெற்றி பெற்றது. இந்த போட்டியில் பென் ஸ்டோக்ஸ் குர்ணாள் பாண்ட்யா மற்றும் குல்தீப் யாதவ் ஓவர்களில் பறக்க விட்ட சிக்ஸர்கள் ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தன. குருணாள் பாண்ட்யா 6 ஓவர்களில் 72 ரன்கள் விட்டுக்கொடுத்தார்.
இந்நிலையில் அவரை ஒரு முழுநேர பந்துவீச்சாளராக ஏற்றுக்கொள்ள முடியாது என சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார். அதில் பந்துவீச்சு மிகவும் பலவீனமாக இருந்தது. குர்ணால் பாண்ட்யா ஐந்தாவது பந்து வீச்சாளராக இருக்க முடியாது. அவர் 10 ஓவர்கள் வீசும் ஒரு பவுலராக இருக்க முடியாது. அவரும் ஹர்திக் பாண்ட்யாவும் சேர்ந்து வேண்டுமானால் 10 ஓவர்களை வீசி இருக்கலாம் எனக் கூறியுள்ளார்.