Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

குஜராத் டைட்டன்ஸ் கேப்டனாக சுப்மன் கில் நியமனம்.. அணி நிர்வாகத்திற்கு நன்றி..!

Advertiesment
subhman gill
, திங்கள், 27 நவம்பர் 2023 (18:38 IST)
குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக சுப்மன் கில்நியமிக்கப்பட்டுள்ளதை அடுத்து தனது சமூக வலைதளத்தில் அவர்  நன்றி தெரிவித்துள்ளார். 
 
குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா இருந்தார் என்பதும் அவர்  ஒரு கோப்பையையும் பெற்று தந்தார் என்பதும் தெரிந்ததே. 
 
இந்த நிலையில் மும்பை அணியில்  இருந்த ஹர்திக் பாண்டியாவை 15 கோடி கொடுத்து மீண்டும்   மும்பை அணி வர வைத்துக் கொண்டது. இதனை அடுத்து குஜராத் அணிக்கு கேப்டனாக சுப்மன் கில் நியமனம் செய்யப்பட்டிருப்பதாக அந்த அணியின் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 
 
இது குறித்து சுப்மன் கில் தனது சமூக வலைதளத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக பொறுப்பேற்றதற்கு பெருமை அடைகிறேன். இவ்வளவு அருமையான அணியை வழி நடத்துவதற்கு என் மேல் நம்பிக்கை வைத்ததற்கு அணி நிர்வாகத்திற்கு நன்றி கூறிக் கொள்கிறேன். இதனை ஒரு மறக்க முடியாத ஒன்றாக நினைக்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

குஜராத் டைட்டன்ஸ் அணியின் புதிய கேப்டன் இவர்தான்… வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!