கோஹ்லியை முந்திய ஸ்டீவ் ஸ்மித் – பவுலிங்கில் பாட் கம்மின்ஸ் முதல் இடம் !

புதன், 11 செப்டம்பர் 2019 (10:32 IST)
ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்திய கேப்டன் விராட் கோஹ்லியை முந்தி முதல் இடத்தைப் பிடித்துள்ளார் ஸ்டீவ் ஸ்மித்.

ஐசிசி டெஸ்ட் போட்டிகளுக்கான வீரர்கள் தரவரிசையை வெளியிட்டுள்ளது. அதில் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் தொடர்ந்து இந்திய அணியின் கேப்டன்  விராட் கோஹ்லியை  ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் முந்தி மீண்டும் முதல் இடத்தைப் பிடித்துள்ளார்.

ஸ்மித் 937 புள்ளிகளுடன் முதல் இடத்தில் இருக்க கோஹ்லி 903 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும் உள்ளது. அதற்கடுத்த இடங்களில் கேன் வில்லியம்ஸன், சட்டேஸ்வர் புஜாரா, ஹென்றி நிகோலஸ், ஜோ ரூட், அஜின்கயே ரஹானே, டாம் லாதம், திமுத் கருணாரத்னே, எய்டன் மார்க்ரம் ஆகியோர் உள்ளனர்.

பந்துவீச்சாளர்கள் வரிசையில் ஆஸ்திரேலிய அணியின் பேட் கம்மின்ஸ் 914 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். அதற்கடுத்த இடத்தில் ரபாடாவும் மூன்றாம் இடத்தில் பூம்ராவும் உள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் இலங்கை வீரர்கள் பாகிஸ்தான் வர மறுப்பதற்கு இந்தியாதான் காரணம் – பாகிஸ்தான் அமைச்சர் குற்றச்சாட்டு !