Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் ஒளிபரப்பு உரிமை ஏலம்: ஸ்டார் ஸ்போர்ட்ஸ் இடம் தோல்வி அடைந்த சோனி

Webdunia
செவ்வாய், 5 செப்டம்பர் 2017 (05:52 IST)
ஐபிஎல் போட்டிகள் 10 சீசன் முடிந்துவிட்ட நிலையில் 11வது சீசன் அடுத்த ஆண்டு தொடங்கவுள்ளது. இந்த நிலையில் 11 முதல் 15 வரை அடுத்த ஐந்து சீசன் ஒளிபரப்புக்கான உரிமம் குறித்த ஏலம் நேற்று மும்பையில் நடைபெற்றது.



 
 
ஐபிஎல் போட்டியை கடந்த பத்து வருடங்களாக ஒளிபரப்பி வரும் சோனி நிறுவனத்திற்கும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்திற்கும் கடும் போட்டியிருந்த நிலையில் ரூ.16,347.50 கோடிக்கு ஏலம் எடுத்து ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் வெற்றி பெற்றது.  ஏற்கனவே ஐ.பி.எல். டைட்டில் ஸ்பான்சர் மூலம் கிரிக்கெட் வாரியம் ரூ.2,199 கோடி பெற்று இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
 
ஐபிஎல் ஏலத்தை தங்கள் கைக்கு கிடைத்துவிட்டதில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மகிழ்ச்சி அடைந்திருப்பதாகவும், ஐந்து வருடங்களில் மிகத்தெளிவான ஒளிபரப்பை தருவோம் என்றும் கூறியுள்ளது..

தொடர்புடைய செய்திகள்

தோல்வி அடைந்த தென்னாபிரிக்கா.! டி-20 தொடரை வென்ற மேற்கிந்திய அணி..!

இறுதி போட்டியில் வெல்ல என்ன செய்ய வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும்: பேட் கம்மின்ஸ்

இன்று ஐபிஎல் இறுதி போட்டி.. கொல்கத்தா - ஐதராபாத் பலப்பரிட்சை.. யாருக்கு கோப்பை?

தொட்டதெல்லாம் தங்கமாக மாறும் மிடாஸ் மன்னனா பேட் கம்மின்ஸ்?.. அடுத்தடுத்து வென்ற கோப்பைகள்!

இப்போது கொண்டாட்டங்களுக்கு இடமில்லை…. ஆட்டநாயகன் விருது பெற்ற ஷபாஸ் அகமது!

அடுத்த கட்டுரையில்
Show comments