Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இலங்கை அணியின் ரன் ரேட்டை கட்டுப்படுத்திய ஆஸ்திரேலியா: எளிய இலக்கு!

aus vs sri
, செவ்வாய், 25 அக்டோபர் 2022 (18:09 IST)
உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் இன்று இலங்கை மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற்று வருகிறது என்பதை பார்த்தோம். 
 
இன்றைய போட்டியில் ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்ற பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து இலங்கை அணியை பேட்டிங் செய்த நிலையில் அந்த அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் எடுத்துள்ளது
 
ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்கள் அபாரமாக பந்து வீசி இலங்கை அணியின் ரன் ரேட்டை கட்டுப்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் தொடக்க ஆட்டக்காரர் நிஷாங்கா மட்டுமே ஓரளவு தாக்குப்பிடித்து 40 ரன்கள் எடுத்து ரன் அவுட் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் 158 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இன்னும் சில நிமிடங்களில் ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்ய களமிறங்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பந்தில் எச்சில் தடவி சர்ச்சையில் சிக்கிய பாகிஸ்தான் வீரர்!