இந்திய பயணத்தால் சுதந்திரத்தை இழந்த இலங்கை கிரிக்கெட் வீரர்கள்

Webdunia
சனி, 30 டிசம்பர் 2017 (00:55 IST)
சமீபத்தில் இந்திய சுற்றுப்பயணம் செய்த இலங்கை அணி டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி-20 ஆகிய மூன்று தொடரையும் இழந்தது. ஒரே ஒரு ஒருநாள் போட்டியில் மட்டுமே வென்று வெறுங்கையுடன் நாடு திரும்பிய இலங்கை அணிக்கு கடும் கண்டனங்கள் எழுந்து வருகிறது

இந்த நிலையில் இலங்கை கிரிக்கெட் அணிக்கு புதிய பயிற்சியாளராக சண்டிகா ஹதுருசிங்கா பொறுப்பேற்றுள்ளார். இவர் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்ற பின்னர் வீரர்கள் பல சுதந்திரங்களை இழந்துள்ளார்களாம். குறிப்பாக பயிற்சியின்போது ஹெட்போனில் இனி யாரும் பாட்டு கேட்கக்கூடாது என்று பயிற்சியாளர் சண்டிகா உத்தரவிட்டுள்ளாராம்

தங்களுக்கு இசை தான் முக்கியம் என்று கருதும் வீரர்கள் வீட்டிற்கு செல்ல வேண்டிய அவசியம் நேரிடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். இந்திய பயணத்தில் ஏற்பட்ட தோல்வி காரணமாக தங்களுடைய சுதந்திரம் பறிபோனதாக இலங்கை வீரர்கள் புலம்புவதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சதம் அடிக்காவிட்டால் நிர்வாணமாக நடப்பேன்: தந்தையின் சவாலுக்கு ஹைடன் மகள் கூறியது என்ன?

சச்சின் படைக்காத 3 டெஸ்ட் சாதனைகள்: ஜோ ரூட் முறியடித்தது எப்படி?

ரோஹித் ஷர்மா, விராட் கோலியை வைத்து குழப்பம் செய்யாதீர்கள்: ரவி சாஸ்திரி கண்டனம்..!

358 ரன்கள் எடுத்தும் தோல்வி ஏன்? கேப்டன் கே.எல்.ராகுல் கூறும் காரணம்..!

அதிக சதமடித்து சாதனை: சச்சின் சாதனையை முறியடித்த விராத் கோஹ்லி..

அடுத்த கட்டுரையில்
Show comments