ஐபிஎல் தொடரில் நேற்று சன்ரைசர்ஸ் அணிக்காக அறிமுகமானார் 21 வயதாகும் உம்ரான் மாலிக்.
பொதுவாகவே இந்திய பந்துவீச்சாளர்கள் வேகத்தை விட வேரியேஷன் மற்றும் ஸ்விங் ஆகியவற்றுக்குதான் முக்கியத்துவம் கொடுப்பார்கள். அதனால் இந்திய பந்துவீச்சாளர்களின் சராசரி பந்து வீச்சு வேகம் 135 கி மீக்குள் தான் இருக்கும். ஆனால் உலக அணிகளில் கண்டிப்பாக ஒருவராவது 145- 150 கி மீ வேகத்தில் வீசுபவர் இருப்பார்.
அந்த வகையில் இப்போது ஒரு அறிமுக இந்திய வீரர் தனது முதல் போட்டியிலேயே 151 கி மீ வேகத்தில் பந்து வீசியுள்ளார். சன் ரைசர்ஸ் ஹைதரபாத் அணிக்காக அறிமுகம் ஆன அவர் 151.03 கி மீ வேகத்தில் பந்து வீசி அசத்தியுள்ளார். இதன் மூலம் ஐபிஎல் தொடரில் அதிவேகமாக வீசிய இந்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார்.