Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொடர் தோல்வி… வீரர்கள் காயம் – இந்தியாவை சமாளிக்குமா தென் ஆப்பிரிக்கா ?

Webdunia
திங்கள், 3 ஜூன் 2019 (11:18 IST)
உலகக்கோப்பையில் இரண்டு தோல்விகளை சந்தித்துள்ள தென் ஆப்பிரிக்கா அணி வீரர்கள் காயமடைவதாலும் பலவீனமடைந்துள்ளது.

நடந்து வரும் உலகக்கோப்பையில் தென் ஆப்பிரிக்கா மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. முதல் போட்டியில் இங்கிலாந்திடம் படுதோல்வி அடைந்த நிலையில் நேற்றைய வங்கதேச அணிக்கு எதிரான உலகக்கோப்பை லீக் போட்டியிலும் தென்னாபிரிக்கா அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வி அடைந்து விளையாடிய இரண்டு போட்டிகளிலும் இரண்டிலும் தோல்வி அடைந்து இன்னும் புள்ளிக்கணக்கை தொடங்காமல் உள்ளது.

இதுமட்டுமில்லாமல் முக்கியமான வீரர்கள் காயத்தால் அவதிப்படுவதால் மேலும் பலவீனமடைந்துள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் அடிபட்டு வெளியேறிய அம்லா இன்னும் முழுமையாக குணமடையவில்லை. ஸ்டெய்னும் காயம் காரணமாக இன்னும் விளையாடவில்லை. இந்நிலையில் நேற்றையப் போட்டியில் பந்துவீசிய இங்கிடி தசைப் பிடிப்புக் காரணமாக வெளியேறியுள்ளார். இவர்கள் மூன்று இந்தியாவுக்கு எதிரான அடுத்த போட்டியில் விளையாடுவது கடினம் என்ற சூழல் உருவாகியுள்ளது.

தென் ஆப்பிரிக்காவுக்கு அடுத்த போட்டி ஜூன் 5 ஆம் தேதி நடக்க உள்ளது. இந்நிலையில் மோசமான ஃபார்ம் மற்றும் வீரர்களின் காயத்தால் இந்தியாவை சமாளிக்குமா தென் ஆப்பிரிக்கா எனக் கேள்வி எழுந்துள்ளது. இந்தியாவுடனானப் போட்டியை தோற்கும் பட்சத்தில் தென் ஆப்பிரிக்காவின் அரையிறுதிக் கனவு கேள்விக்குறியாகும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

லார்ட்ஸ் டெஸ்ட் போட்டி… ஆமை வேகத்தில் செயல்பட்ட இங்கிலாந்து அணிக்கு அபராதம்!

தீப்தி ஷர்மா அபார ஆட்டம்.. இங்கிலாந்து அணியை வீழ்த்திய இந்திய மகளிர் அணி..!

ஜடேஜா நல்லாதான் விளையாண்டார்…. ஆனாலும்?- சஞ்சய் மஞ்சரேக்கர் விமர்சனம்!

சில போட்டிகள் நம் கூடவே இருக்கும்… அவற்றின் வெற்றி தோல்விகளுக்காக அல்ல… லார்ட்ஸ் போட்டி குறித்து பதிவிட்ட சிராஜ்!

3வது டெஸ்ட் போட்டி.. கேப்டன் கில் இடம் இங்கிலாந்து மன்னர் சார்லஸ் கேட்ட ஒரே ஒரு கேள்வி..

அடுத்த கட்டுரையில்
Show comments