Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2வது டி-20 போட்டி: 6 விக்கெட் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா வெற்றி

Webdunia
வியாழன், 22 பிப்ரவரி 2018 (06:10 IST)
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா நாடுகளுக்கு இடையே நடைபெற்று வரும் டி-20 தொடர் போட்டியில் முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்ற நிலையில் நேற்று சென்சுரியன் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி பெற்றது.
 
டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் பந்துவீச தீர்மானித்ததால் முதல் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்கள் எடுத்தது. மணிஷ் பாண்டே 79 ரன்களும், தோனி 52 ரன்களும் எடுத்தனர்.
 
189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி 18.4 ஓவர்களீல் 4 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 189 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. டுமினி 64 ரன்களும், க்லேசன் 69 ரன்களும் எடுத்தனர். இந்த வெற்றியின் மூலம் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று சம நிலையில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான 3வது மற்றும் இறுதி டி-20 போட்டி வரும் 24ஆம் தேதி கேப்டவுன் மைதானத்தில் நடைபெறும். இந்த போட்டியில் வெல்லும் அணியே தொடரை வெல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மேக்ஸ்வெல்லின் செயலால் கடுப்பான ஸ்ரேயாஸ் ஐயர்…!

வாரி வழங்கும் வள்ளல் ஆன ஷமி… நேற்றையப் போட்டியில் படைத்த மோசமான சாதனை!

தோனி, அஸ்வினின் மூளை வேலை செய்வது நின்று விட்டதா?... கடுமையாக விமர்சித்த மனோஜ் திவாரி!

சதமடித்து விட்டு பாக்கெட்டில் இருந்து பேப்பரை எடுத்துக் காட்டிய அபிஷேக் ஷர்மா.. ரசிகர்கள் நெகிழ்ச்சி!

டெஸ்ட், ஒருநாள் போட்டிகளில் விதிகள் மாற்றம்: ஐசிசி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments