2020ம் ஆண்டு நடக்கவுள்ள 20 ஓவர் உலக கோப்பைக்கான தகுதி சுற்று ஆட்டத்தில் இந்திய அணி நேரடியாக தேர்வாகியுள்ளது.
ஐசிசி நடத்தும் உலக கோப்பை டி20 போட்டிகள் 2020ம் ஆண்டும் அரபு நாடுகளில் நடைபெற இருக்கிறது. இதற்கான தகுதி சுற்று ஆட்டங்கள் இன்று முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற இருக்கின்றன.
மொத்தம் 16 அணிகளே டி20 போட்டிகளில் பங்கேற்க முடியும் என்ற நிலையில் தரவரிசை அணிகள் தவிர 14 அணிகள் போட்டிக்கு தயாராய் உள்ளன. இந்த 14 அணிகளும் இரு பிரிவாய் பிரிக்கப்பட்டு இரு பிரிவுக்கும் இடையே ஆட்டங்கள் நடத்தப்படும். இதில் தேர்வாகும் 6 அணிகள் டி20ல் பங்கேற்க தகுதி பெறும் என ஐசிசி அறிவித்துள்ளது.
உலக கோப்பை கிரிக்கெட் தரவரிசை பட்டியலில் டாப் 10 இடங்களில் உள்ள அணிகள் இந்த தகுதி சுற்றில் விளையாட தேவையில்லை என்பதால் இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட முக்கியமான 10 நாடுகள் இந்த தகுதி சுற்றில் விளையாடவில்லை.
ஜிம்பாப்பே கிரிக்கெட் வாரியத்திற்கு ஐசிசி தடை விதித்திருப்பதால் அந்த அணியும் இந்த தகுதி சுற்றில் இடம்பெறவில்லை. மேலும் தகுதி சுற்றில் எப்படியாவது வென்றுவிட சில நாட்டு அணிகள் மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபடுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து ஐசிசி தீவிரமாக கண்காணித்து வருகிறது. எந்த அணியாவது சூதாட்டத்தில் ஈடுபடுவது கண்டுபிடிக்கப்பட்டால் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஐசிசி எச்சரித்துள்ளது.