Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்தடுத்த பந்துகளில் இரண்டு விக்கெட்டுக்கள்: சிராஜ் அசத்தல் பவுலிங்!

Webdunia
வெள்ளி, 13 ஆகஸ்ட் 2021 (20:55 IST)
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் டெஸ்ட் போட்டி தற்போது நடைபெற்று வரும் நிலையில் இன்றைய போட்டியில் பந்து வீச்சாளர் சிராஜ் அடுத்தடுத்த இரண்டு பந்துகளில் இங்கிலாந்தின் இரண்டு முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் 
 
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி தற்போது லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் இந்தியா 364 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கேஎல் ராகுல் மிக அபாரமாக விளையாடி 129 ரன்கள் அடித்தார். கேப்டன் விராட் கோலி 42 ரன்களும் ஜடேஜா 40 ரன்களும் அடித்துள்ளனர் 
 
இந்த நிலையில் சற்று முன் இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. சிராஜ் வீசிய 15வது ஓவரில் டான் சிப்லி தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அதற்கு அடுத்த பந்திலேயே ஹமீது போல்ட் முறையில் அவுட்டானார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இதனை அடுத்து சிராஜ் அடுத்தடுத்த பந்துகளில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். தற்போது பர்ன்ஸ் மற்றும் கேப்டன் ரூட் ஆகியோர் களத்தில் உள்ளனர் என்பதும், இங்கிலாந்து அணி 340 ரன்கள் பின்தங்கி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டி… விளையாடும் 11 வீரர்களை அறிவித்த இங்கிலாந்து!

310 ரன்கள் இலக்கு.. ஏமாற்றிய வைபவ் சூர்யவன்ஷி.. இந்தியா U-19க்கு வெற்றி கிடைக்குமா?

அம்பி to அந்நியன்… ஒல்லியான தோற்றத்தில் ஃபிட்டாகக் காணப்படும் சர்பராஸ் கான்!

தேசங்களை இணைப்பதுதான் விளையாட்டு… இந்திய அணியின் முடிவுக்கு அதிருப்தி தெரிவித்த ஷாகித் அப்ரிடி!

லார்ட்ஸில் மட்டும்தான்.. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்… அடுத்த மூன்று சீசன்களூக்கு மாற்றமில்லை!

அடுத்த கட்டுரையில்
Show comments