கடந்த ஆண்டு சிராஜை ரசிகர்கள் அதிகமாக திட்டினார்கள்… இப்போது ஆண்டு நிருபித்துவிட்டார்! கோலி புகழாரம்!

Webdunia
வியாழன், 22 அக்டோபர் 2020 (12:14 IST)
நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியின் பந்துவீச்சாளர் முகமது சிராஜ் அபாரமாக பந்துவீசி 3 விக்கெட்களை சாய்த்த நிலையில் அவரைப் பாராட்டியுள்ளார் கோலி.

அனைவரும் அதிசயப்படும் வகையில் உள்ளது இந்த ஆண்டு ஆர்சிபி வீரர்களின் ஆட்டம். புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்த்தில் உள்ள ஆர்சிபி பிளே ஆஃப் செல்வது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது. இந்நிலையில் நேற்றைய போட்டியில் ஆர்சிபி அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் தான் வீசிய நான்கு ஓவர்களில் 8 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

அதிலும் தனது முதல் இரண்டு ஓவர்களுமே விக்கெட்களையும் எடுத்தும் ரன்கள் கொடுக்காமல் மெய்டனும் செய்தார். இது ஐபிஎல் வரலாற்றிலேயே இதுவரை யாருமே நிகழ்த்தாத சாதனையாகும். இந்த ஆட்டத்தில் ஆட்டநாயகன் விருதும் பெற்றார். இந்நிலையில் வெற்றிக்குப் பின் பேசிய கேப்டன் கோலி ‘கடந்த ஆண்டு சிராஜுக்கு சிறப்பாக அமையவில்லை. அதனால் ரசிகர்கள் அவரை அளவுக்கு மீறி விமர்சித்தார்கள். ஆனால் இந்த ஆண்டு அவர் கடுமையாக உழைத்து தன்னை நிருபித்துள்ளார்.’ எனக் கூறியுள்ளார். 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கிரிக்கெட்டை தவிர வேறு எதுவும் வேண்டாம்.. திருமண ரத்துக்கு பிறகு மனம் திறந்த ஸ்மிருதி மந்தனா..

பாகிஸ்தானுக்கு ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியை அனுப்பலாமா? பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு..!

மூன்று ஃபார்மட்டுகளிலும் 100 விக்கெட்டுகள் எடுத்த முதல் இந்திய வீரர்.. பும்ராவுக்கு குவியும் வாழ்த்துக்கள்..!

தென்னாபிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டி.. 102 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி..!

தென்னாப்பிரிக்கா அணிக்கு திரும்பும் டேவிட் மில்லர்.. இந்திய அணியில் சுப்மன் கில்- ஹர்திக்.. இன்று முதல் டி20 போட்டி..!

அடுத்த கட்டுரையில்
Show comments