Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரோஹித் சர்மா, கோஹ்லி மட்டுமல்ல, பும்ராவும் இல்லை.. இங்கிலாந்து செல்லும் இந்திய அணியின் கேப்டன் யார்?

Siva
வெள்ளி, 23 மே 2025 (17:21 IST)
இந்திய அணி ஜூன் மாதம் இங்கிலாந்தில் நடைபெறும்  டெஸ்ட் தொடருக்கான அணியை மே 24ம் தேதி அறிவிக்கிறது. ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தில் இருந்த பெரும்பாலான வீரர்கள் மீண்டும் இடம் பிடிக்க உள்ளனர். ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஓய்வு பெற்றதால், இந்திய ஏ அணியில் உள்ள சிலர் தேசிய அணியில் வர வாய்ப்பு உள்ளது.
 
இந்நிலையில் பும்ரா அணி கேப்டனாக நியமனம் செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் தன்னால் 3 டெஸ்ட்கள் விளையாட முடியாது என பிசிசிஐயிடம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு முதுகு பிரச்னை ஏற்பட்டுள்ளதாகவும், இதன் இது காரணமாகவே, அவரை கேப்டனாகவும் நியமனம் செய்ய வாய்ப்பு இல்லை என கூறப்படுகிறது. 
 
இந்நிலையில் சுப்மன் கில் இந்தியாவின் புதிய டெஸ்ட் கேப்டனாக நியமிக்கப்படுகிறார் என பல்வேறு அறிக்கைகள் தெரிவிக்கின்றன. அவர் இதுவரை டெஸ்ட் அணியின் கேப்டனாக இருந்தது இல்லை. ஆனால் 2024 T20 உலகக் கோப்பைக்குப் பிறகு ஜிம்பாப்வே சுற்றுப்பயணத்தில் T20I கேப்டனாக அறிமுகமானார். தற்போது அவர் டெஸ்ட்  கேப்டனாக நியமிக்கப்படலாம்.
 
அதேபோல் ரிஷப்த் பந்த்,   துணை கேப்டனாக நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓய்வு என்பது வீரர்களின் தனிப்பட்ட முடிவு… யாரும் ஒன்றும் செய்ய முடியாது – கம்பீர் விளக்கம்!

அடுத்தடுத்து வரும் நற்செய்திகள்… ஆர் சி பி அணியில் இணையும் வெளிநாட்டு வீரர்!

டெஸ்ட் அணியில் கோலியின் இடத்தைக் கைப்பற்றும் ஷுப்மன் கில்?

RCB அணிக்கு மகிழ்ச்சியான செய்தி… அணிக்குள் வரும் முக்கிய வீரர்!

டெஸ்ட் கிரிக்கெட்டில் 13000 ரன்கள்… புதிய மைல்கல்லை எட்டிய ஜோ ரூட்!

அடுத்த கட்டுரையில்
Show comments