காமன்வெல்த் போட்டியில் இந்திய வீரர் ஜித்து ராய் துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்று அசத்தியுள்ளார்.
ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நடந்து வருகின்றன. காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இந்திய வீரர்-வீராங்கனைகள் பதக்கங்களை குவித்து வருகின்றனர். இந்தியா ஏற்கனவே 7 தங்கம் வென்றுள்ள நிலையில் இன்று மேலும் ஒரு தங்கம் வென்றுள்ளது.
ஆடவர் காமன்வெல்த் போட்டியில் 10மீ ஏர்பிஸ்டல் பிரிவில் உத்திரப்பிரதேசத்தை சேர்ந்த ஜித்துராய் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். மேலும் ராஜத்தானை சேர்ந்த ஓம் மிதர்வால் வெண்கலப்பதக்கம் வென்றுள்ளார். இந்தியா தற்பொழுது வரை 8 தங்கம், 3 வெள்ளி, 4 வெண்கலம் என 15 பதக்கங்களுடன் பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது.