Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாசிம் அக்ரம்மை கொலையே செய்திருப்பேன்! அக்தர் பகிர்ந்த ரகசியம்!

Webdunia
புதன், 22 ஏப்ரல் 2020 (08:38 IST)
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சாளரான சோயிப் அக்தர் தனது சீனியர் பவுலரான வாசிம் அக்ரம் குறித்துப் பேசியுள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி எப்போதுமே உலகத்தரம் மிக்க வேகப்பந்து வீச்சாளர்களை உருவாக்கியுள்ளது. அதில் வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ் மற்றும் சோயிப் அக்தர் ஆகிய மூன்று பேரும் முக்கியமானவர்கள் மற்றும் ஒரே நேரத்தில் அணியில் இடம்பெற்று விளையாடியவர்கள்.

இந்நிலையில் தனது சீனியர் பவுலரான வாசிம் அக்ரம் குறித்து சோயிப் அக்தர் ‘நான் கிரிக்கெட்டுக்கு அறிமுகம் ஆவதற்கு முன்னதாக வாசிம் அக்ரமின் பல்வேறு போட்டிகளை பார்த்துள்ளேன். இக்கட்டான நேரங்களில் சிறப்பாக பவுலிங் செய்து அணிக்கு எப்படி வெற்றி பெற்று தருகிறார் என வியந்துள்ளேன்.  அணியில் இடம்பெற்ற பின் அவருடன் சேர்ந்து 7 அல்லது 8 ஆண்டுகள் விளையாடியுள்ளேன். அவர் தலைமையின் கீழ் விளையாடிய போது எனக்கு ஆதரவாக இருந்தார். ஒருவேளை அவர் என்னைப் போட்டிகளில் 'பிக்சிங்'  அணுகி இருந்தால், அவரை கொலை கூட செய்திருப்பேன். ஆனால் ஒருபோதும் இவர், அப்படி பேசியது கிடையாது’ எனக் கூறியுள்ளார்.

2000 ஆம் ஆண்டு தொடக்கத்தில் பாகிஸ்தான், இந்தியா உள்ளிட்ட நாடுகளில் பல கிரிக்கெட் வீரர்கள் மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகளுக்கு ஆளானார்கள்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ப்ளே ஆஃப் வாய்ப்பு முடிந்துவிட்டதாக நினைக்கவில்லை.. மைக் ஹஸ்ஸி நம்பிக்கை!

ஜெயிச்சிட்டு சி எஸ் கே ரசிகர்களுக்கே ஆறுதல் சொன்ன கே கே ஆர்!

சென்னை அணி வைத்த ‘டொக்கு’களால் 25500 மரக்கன்றுகள் நடப்படுகின்றன.. இப்படிதான் ஆறுதல் பட்டுக்கணும்!

விளையாட்டை விட தனி நபர் பெரிதல்ல… தோனியை மறைமுகமாக விமர்சித்த விஷ்ணு விஷால்!

நிச்சயமாக இது எங்களைக் காயப்படுத்தும்… நாங்கள் விமர்சனத்துக்கு தகுதியானவர்கள்தான் – சிஎஸ்கே பயிற்சியாளர்!

அடுத்த கட்டுரையில்
Show comments