Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நியுசிலாந்தை வீழ்த்தி உங்களைக் காப்பாற்றி இருக்கிறோம் இந்தியா… சோயிப் அக்தர் !

Advertiesment
நியுசிலாந்தை வீழ்த்தி உங்களைக் காப்பாற்றி இருக்கிறோம் இந்தியா… சோயிப் அக்தர் !
, வியாழன், 28 அக்டோபர் 2021 (15:11 IST)
நியுசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது இந்தியாவுக்கு சாதகமாக அமைந்துள்ளது.

இந்தியாவை 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் இரண்டாவது போட்டியில் மற்றொரு பலமான அணியான நியுசிலாந்துடன் மோதியது. இந்த போட்டி இந்திய அணிக்கும் மிக முக்கியமானது என்பதால் இந்திய ரசிகர்களும் ஆர்வமாக பார்த்தனர்.

ஏனென்றால் அந்த போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றால் இந்தியா அரையிறுதி சுற்றுக்கு தகுதிபெறுவது எளிது. ஒருவேளை நியுசிலாந்து அணி பாகிஸ்தானை வெற்றி பெற்று விட்டால், இந்தியாவுக்கு நிலைமை மிகவும் மோசமாகிவிடும் என்பதால் இந்திய ரசிகர்கள் பாகிஸ்தான் வெற்றி பெறவேண்டும் எனவே விரும்பினர்.

அதைப்போலவே பாகிஸ்தானும் வெற்றி பெற்றது. இந்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் ‘நியுசிலாந்துக்கு வாழ்த்துக்கள். இப்போது பாதுகாப்பாக இருக்கிறீர்களா? மைதானத்துக்குக் கூட பாதுகாப்பு படை வீரர்களை அனுப்பி இருப்போம். நாங்கள் இந்தியா இறுதிப் போட்டிக்கு வருவதை விரும்புகிறோம். நியுசிலாந்தை வீழ்த்தி உங்களைக் காப்பாற்றி இருக்கிறோம். இறுதிப் போட்டியில் உங்களை சந்திக்க ஆவலாக உள்ளோம்’ எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வெஸ்ட் இண்டீஸ் அணியில் சேர்க்கப்படும் முன்னாள் கேப்டன்!