Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடர்: இந்திய அணியின் கேப்டன் இவரா?

Webdunia
திங்கள், 12 செப்டம்பர் 2022 (09:37 IST)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான டி20 கிரிக்கெட் தொடர் வரும் 20ஆம் தேதி தொடங்கியிருக்கும் நிலையில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 28ஆம் தேதி தொடங்க உள்ளது 
 
இந்த நிலையில் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் கேப்டனாக ஷிகர் தவான் தேர்வு செய்ய வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது 
 
தென்னாபிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய அணிக்கு கேப்டனாக ஷிகர் தவான் நியமனம் செய்யப்படுவார் என பிசிசிஐயின் முக்கிய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக அக்டோபர் மாதம் 3 ஒருநாள் போட்டிகளில் இந்தியா விளையாட உள்ளது என்பதும் முதல் போட்டியில் அக்டோபர் 6ம் தேதியும் இரண்டாவது போட்டி அக்டோபர் 9ஆம் தேதியும் மூன்றாவது போட்டி அக்டோபர் 11ஆம் தேதியும் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
முன்னதாக இந்திய-தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டி20 கிரிக்கெட் தொடரும் நடைபெறவுள்ளது. முதல் போட்டி செப்டம்பர் 28ஆம் தேதியும், 2வது டி20 போட்டி அக்டோபர் 2ஆம் தேதியும், 3வது டி20 போட்டி அக்டோபர் 4ஆம் தேதியும் நடைபெறவுள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டி 20 கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்த ஜோஸ் பட்லர்!

கம்பீருக்கு ஆல்ரவுண்டர்கள் அதிக பாசம்… ஆனால் அணிக்குள் மூன்று பேர் எதற்கு?- அஜிங்யா ரஹானே கேள்வி!

கோலி ஆக்ரோஷமாக செயல்பட்டாலும் அதில் கிங்… ஆனால் கில்?- சஞ்சய் மஞ்சரேக்கர் விமர்சனம்!

தோனிதான் அந்த விஷயத்தில் மாஸ்டர்… ஷுப்மன் கில் அதைக் கற்றுக்கொள்ளலாம்- கேரி கிரிஸ்டன் அறிவுரை!

ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பிங் செய்வதில் சிக்கலா?.. இந்திய அணிக்குப் பின்னடைவு!

அடுத்த கட்டுரையில்
Show comments