காயத்தில் இருந்து குணமான இரண்டு இந்திய வீரர்கள்… உலகக்கோப்பைக்கு ரெடி?

Webdunia
திங்கள், 12 செப்டம்பர் 2022 (08:47 IST)
இந்திய அணியின் வீரர்கள் பூம்ரா மற்றும் ஹர்ஷல் படேல் ஆகிய இருவரும் காயம் காரணமாக தேசிய கிரிக்கெட் அகாடெமியில் பயிற்சியில் ஈடுபட்டு வந்தனர்.

சமீபத்தில் நடந்த ஆசியக் கோப்பையில் இந்திய அணி வெளியேறியதற்கு முக்கியக் காரணமே பவுலிங் சொதப்பல்தான் என்று சொல்லப்படுகிறது. ஏனென்றால் எல்லா போட்டிகளிலும் முதலில் பேட் செய்த இந்திய அணி நல்ல ஸ்கோரையே இலக்காக நிர்ணயித்தது. ஆனால் இந்திய பவுலர்களால் அந்த இலக்குக்குள் எதிரணியை வீழ்த்த முடியவில்லை.

டி 20 போட்டியில் கடந்த சில ஆண்டுகளாக இந்திய அணியின் பில்லராக இருந்து வருபவர் பூம்ரா. அதே போல சமீபகாலமாக டி 20 போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு வருபவர் ஹர்ஷல் படேல். இவர்கள் இருவரும் காயம் காரணமாக ஆசியக் கோப்பை தொடரில் விளையாடவில்லை.

இவர்கள் இருவரும் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடெமியில் பயிற்சியில் ஈடுபட்டு வந்த நிலையில் தற்போது குணமாகியுள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் இவர்கள் இருவரும் நவம்பரில் நடக்க உள்ள டி 20 உலகக்கோப்பை தொடருக்கு தயாராக இருப்பார்கள் என்று சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் இணையும் கேன் வில்லியன்ஸன்… ஆனால் வீரராக இல்லை..!

ஆஸ்திரேலிய தொடரில் கோலி படைக்கக் காத்திருக்கும் சாதனைகள்..!

ஆஸ்திரேலியா புறப்பட்ட ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி!

டெஸ்ட்டுக்கு சச்சின்… டி 20 போட்டிகளுக்கு நான் – சூர்யகுமார் யாதவ் கருத்து!

ஃபிட்னெஸின் குருவே கோலிதான் – விமர்சனங்களுக்கு முன்னாள் வீரர் பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments