ரியோ ஒலிம்பிக் போட்டியின் மகளிர் 400 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் பஹாமஸ் நாட்டைச் சேர்ந்த ஷானே மில்லர் தங்கப் பதக்கம் வென்ற விதம் சிலிர்ப்பூட்டும் வகையில் அமைந்தது.
மிகவும் பரபரப்பான மகளிர் 400 மீட்டர் ஓட்டப் பந்தயத்தின் இறுதி தருணங்களில், முதலில் தடுமாறிய மில்லர் வெற்றி கோட்டை நெருங்கிய சமயத்தில், எல்லைக்கோட்டின் மீது தாவி விழுந்து இலக்கை அடைந்தார்.
இதன் மூலம், அமெரிக்காவின் அலிசன் ஃபெலிக்ஸை அவர் இரண்டாவது இடத்துக்கு தள்ளினார். பந்தைய தூரத்தை ஷானே மில்லர், 49.44 வினாடிகளில் இலக்கை அடைந்து தங்கப் பதக்கம் வென்றார்.
49.51 வினாடிகளில் இலக்கை அடைந்த அலிசன் ஃபெலிக்ஸ் வெள்ளிப் பதக்கம் பெற்றார். மூன்றாவது வந்த ஜமைக்காவின் ஷெரிக்கா ஜாக்சன் வெண்கலப் பதக்கம் வென்றார்.
ஷானே மில்லருக்கும், அமெரிக்காவின் அலிசன் ஃபெலிக்ஸ்-க்கும் உள்ள வித்தியாசத்தை காட்டும் வரைபடம்
22 வயதாகும் மில்லர் இது குறித்து கூறுகையில், ''தங்கப் பதக்கம் பெற வேண்டும் என்ற ஒரு விஷயத்தை மட்டுமே நான் எண்ணிக் கொண்டிருந்தேன்.
இலக்கை அடைய, நான் தரையில் தாவி விழுந்தது அதற்கு பிறகு தான் எனக்கு தெரியும்'' என்று தெரிவித்தார். போட்டியில் வெல்ல வேண்டும் என்பதற்காக நடந்த ஒரு இயல்பான எதிர்வினை இது'' என்று கூறினார்.