Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறுநகரத்து இளைஞர்களுக்கான வாய்ப்பை தோனிதான் உருவாக்கினார் – காங்கிரஸ் தலைவர் வாழ்த்து!

Webdunia
செவ்வாய், 18 ஆகஸ்ட் 2020 (11:05 IST)
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி ஓய்வை அறிவித்துள்ள நிலையில் அவருக்கு முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூர் தனது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி சர்வதேசக் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி ஓராண்டுக்கு மேலாக ஆன நிலையில் அவரின் எதிர்காலம் என்ன என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. இதையடுத்து இரு நாட்களுக்கு முன்னர் ஐபிஎல் போட்டிகளுக்காக  சென்னையில் பயிற்சி மேற்கொள்வதற்காக ராஞ்சியில் இருந்து தனி விமானத்தில் தோனி சென்னை வந்த தோனி, இன்ஸ்டாகிராமில் தனது ஓய்வு முடிவை அறிவித்தார். இது இந்தியா முழுவதும் அதிர்வலைகளை எழுப்பியது.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் முன்னணி தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான சசி தரூர் ‘சிறுநகரங்கள், கடைக்கோடி நகரங்களில் இருந்து வீரர்கள் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார்கள் என்றால் அதற்கான கதவுகளை திறந்துவிட்டது தோனிதான்.’ எனக் கூறி அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தோனியிடம் மந்திரக் கோல் ஒன்றும் இல்லை.. சி எஸ் கே பயிற்சியாளர் ஓபன் டாக்!

தோனியை unfollow செய்த ருத்துராஜ்… சிஎஸ்கே அணிக்குள் நடக்கும் பிரச்சனைதான் என்ன?

ருத்துராஜுக்கு பதில் சி எஸ் கே அணிக்கு வரப்போகும் 17 வயது இளம் வீரர்!

என்ன ஆச்சு கிங் கோலிக்கு?.... போட்டிக்கு இடையில் மூச்சு வாங்கி திணறல்!

முட்டிக் கொண்ட பும்ரா & கருண்… சமாதானப் படுத்திய சக வீரர்கள் – ரோஹித்தின் ரியாக்‌ஷன்தான் செம்ம!

அடுத்த கட்டுரையில்
Show comments