Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோலி தோனியை நான்காவதாக களமிறக்க பயப்படுவது ஏன்? சேவக்...

Webdunia
திங்கள், 19 பிப்ரவரி 2018 (16:46 IST)
இந்திய அணி தென் ஆப்ரிக்காவில் சுற்றுபயணம் மேற்கொண்டுள்ளது. டெஸ்ட் தொடரில் அடைந்த தோல்வியை ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்று தென் ஆப்ரிக்காவை பழி தீர்த்தது. 
இந்நிலையில் நேற்று இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற முதலாவது டி-20 போட்டியில் இந்திய அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 
 
மொத்தம் நடைபெறவுள்ள 3 டி-20 போட்டிகளில் ஒரு போட்டியில் வெற்றி பெற்று இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. கடந்த போட்டியில் தோனி 6 வது இடத்தில் களமிறங்கினார். இது குறித்து முன்னாள் வீரர் சேவக் கருத்து தெரிவித்துள்ளார். 
 
பேட்டிங் வரிசையில் தோனியை 4வது வீரராக கேப்டன் கோலி களம் இறக்க வேண்டும். மிடில் ஆர்டர் வரிசையில் முன்னேற்றம் காண இதைதான் கோலி செய்ய வேண்டும். 
 
தோனி 4-வதாக வந்தால் ஆட்டத்தை நிறைவு செய்ய முடியாது என்று கோலி பயப்படுகிறார். மனிஷ் பாண்டே அல்லது ஹர்த்திக் பாண்ட்யாவை ஆட்டத்தை நிறைவு செய்யலாம் என சேவக் கூறியுள்ளார். 
 
தோனி 4வது இடத்தில் களமிறக்கப்படுவது குறித்து ஏற்கனவே விவாதங்கள் நடைபெற்று ஓய்ந்த நிலையில், சேவக் இதற்கு மீண்டும் பிள்ளையார் சுழி போட்டுள்ளார். கோலி இதனை கணக்கில் எடுத்துக்கொள்வாரா என பார்ப்போம்.

தொடர்புடைய செய்திகள்

இளம் வீரர்கள் அதிரடியால் இமாலய இலக்கை நிர்ணயித்த டெல்லி… துரத்திப் பிடிக்குமா ராஜஸ்தான்?

டாஸ் வென்ற ராஜஸ்தான் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

ஐபிஎல்ல தடுமாறலாம்.. உலகக்கோப்பைன்னு வந்தா அவர் ஹிட்மேன்தான்! – யுவராஜ் சிங் நம்பிக்கை!

ப்ளே ஆஃப் செல்ல கடைசி வாய்ப்பு… ராஜஸ்தானை இன்று எதிர்கொள்ளும் டெல்லி கேப்பிடல்ஸ்!

தோனிக்கு இந்த பிரச்சனை இருக்கு… அதனால்தான் அவர் கடைசியில் விளையாடுகிறார் – சிஎஸ்கே அணி தரப்பு தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments