Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டி20 போட்டியே வேண்டாம்; இங்கிலாந்து கோச் சர்ச்சை கருத்து

Webdunia
திங்கள், 19 பிப்ரவரி 2018 (15:41 IST)
கிரிக்கெட்டில் இருந்து டி20 போட்டியை நீக்க வேண்டும் என்று இங்கிலாந்து பயிற்சியாளர் திரோவர் பேலிஸ் கூறியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 
கிரிக்கெட் போட்டிகளில் தற்போது டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளை விட டி20 போட்டிகளுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. வணிக ரீதியாக போட்டிகளை நடத்துவதில் கிரிக்கெட் வாரியமும் ஆர்வம் காட்டி வருகிறது.
 
முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் டி20 போட்டிகளுக்கு பெரிதாக ஆதரவு தெரிவிப்பதில்லை. இங்கிலாந்து டி20 போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவது இல்லை. இந்நிலையில் இங்கிலாந்து பயிற்சியாளர் திரோவர் பேலிஸ் கிரிக்கெட்டில் இருந்து டி20 போட்டியை நீக்க வேண்டும் என்று கூறியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அவர் கூறியதாவது:-
 
டி20 போட்டிகள் வீரர்களின் விளையாட்டு திறனை மொத்தமாக பாதிக்கும். டி20யில் உலகக்கோப்பை போட்டிகள் நடத்தக்கூடாது. புதிய வீரர்களை தேர்வு செய்ய மட்டுமே டி20 போட்டி நடத்த வேண்டும். அதுதான் பயிற்சியாளர்களுக்கு நல்லது என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

ஐபிஎல் திருவிழா… சென்னையில் இன்று சி எஸ் கே வை எதிர்கொள்ளும் பஞ்சாப்…!

மும்பை இந்திய்ன்ஸ் கிட்ட எவ்ளோ வாங்குனீங்க? நடுவரை வறுத்தெடுத்தும் ரசிகர்கள்… எல் எஸ் ஜி வீரரின் ரன் அவுட்டில் கிளம்பிய சர்ச்சை!

டி 20 உலகக் கோப்பை தொடர்… ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித்துக்கு வாய்ப்பில்லை!

தோல்விக்கு இதுதான் காரணம்… மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா!

ப்ளே ஆஃப் சுற்றுக்கு லீவ் லெட்டர் கொடுக்கும் இங்கிலாந்து வீரர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments