Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யுஎஸ் ஓபன் டென்னிஸ்: செரீனா வில்லியம்ஸ் அதிர்ச்சி தோல்வி

Webdunia
வெள்ளி, 11 செப்டம்பர் 2020 (13:16 IST)
யுஎஸ் ஓபன் டென்னிஸ்: செரீனா வில்லியம்ஸ் அதிர்ச்சி தோல்வி
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி தொடர் கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் சற்று முன் நடைபெற்ற முக்கிய போட்டி ஒன்றில் அமெரிக்காவின் செரீனா வில்லியம் அதிர்ச்சி தோல்வியடைந்தார் 
 
யுஎஸ் ஓபன் டென்னிஸ் தொடரின் அரையிறுதிச் சுற்றில் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் மற்றும் விக்டோரியா அசரென்கா மோதினர். இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் முக்கிய போட்டியில் செரீனா வில்லியம்ஸ் முதல் செட்டை 6-1 என்ற கணக்கில் வென்றார். ஆனால் அதன் பின்னர் விக்டோரியா அசரென்கா அதிரடியாக விளையாடி 6-3, 6-3 என்ற செட் கணக்கில் செரீனா வில்லியம்ஸை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றார்
 
செரினா வில்லியம்ஸ் என்ற தொடரில் வெற்றி பெற்றால் 24 கிராண்ட்ஸ்லாம் வென்ற புதிய சாதனை ஏற்படுத்துவார் என்ற நிலையில் அரையிறுதிப் போட்டியில் அவர் தோல்வி அடைந்தது அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற விக்டோரியா அசரென்காவுக்கு அவரது ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கடைசி 3 பேட்ஸ்மேன்கள் ஜீரோ ரன்கள்.. 224 ரன்களுக்கு இந்தியா ஆல் அவுட்.. இங்கிலாந்து பேட்டிங்..!

அந்த அணிக்காக நான் 8 ஆண்டுகள் விளையாடினேன்.. ஆனால் எதுவும்… சஹால் ஓபன் டாக்!

மும்பை இந்தியன்ஸ் அணியின் இளம் வீரரை டிரேட் செய்கிறதா RCB?

அவுட் ஆகி வந்த ஜடேஜாவைக் கடுமையாக திட்டினாரா கம்பீர்?

மீண்டும் ஆர் சி பி அணியில் ABD… என்ன பொறுப்பில் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments