Webdunia - Bharat's app for daily news and videos

Install App

7-வது முறையாக விம்பிள்டனை கைப்பற்றினார் செரீனா வில்லியம்ஸ்

Webdunia
ஞாயிறு, 10 ஜூலை 2016 (11:49 IST)
22 கிராண்ட்ஸ்லாம் பதக்கங்கள் வென்று ஸ்டெபிகிராஃபின் சாதனையை சமன் செய்துள்ளார் செரீனா வில்லியம்ஸ்.
 


 





விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் இங்கிலாந்தில் உள்ள லண்டன் நகரில் நடைபெற்று வருகிறது. பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் செரீனா வில்லியம்ஸ், ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்பரை எதிர்கொண்டார். முதல் செட்டில் இருவரும் சம பலத்துடன் விளையாடினார்கள். முதல் சர்வீஸை செரீனா தொடங்கினார். ஆட்டத்தை எந்தவித சிரமமுமின்றி கைப்பற்றினார். 2-வது கேமை கெர்பர் தொடங்கினார். இதில் பிரேக் பாயிண்ட் வரை சென்ற பின் கெர்பர் கைப்பற்றினார்.

ஆனால் கெர்பர் தனது 6-வது சர்வீஸை தவர விட்டதால் செரீனா 7-5 என முதல் செட்டை கைப்பற்றினார். அடுத்த செட்டில் 4-3 என்ற நிலையில் கெர்பரின் 4-வது சர்வீஸை திறமையாக செரீனா கையாண்டு தனதாக்கினார். இதனால் செரீனா 5-3 என முன்னிலை பெற்றார். அடுத்த தனது சர்வீஸை சிறப்பாக முடித்த செரீனா 6-3 என கைப்பற்றி வெற்றி பெற்றார்.
 





எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டி 20 கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்த ஜோஸ் பட்லர்!

கம்பீருக்கு ஆல்ரவுண்டர்கள் அதிக பாசம்… ஆனால் அணிக்குள் மூன்று பேர் எதற்கு?- அஜிங்யா ரஹானே கேள்வி!

கோலி ஆக்ரோஷமாக செயல்பட்டாலும் அதில் கிங்… ஆனால் கில்?- சஞ்சய் மஞ்சரேக்கர் விமர்சனம்!

தோனிதான் அந்த விஷயத்தில் மாஸ்டர்… ஷுப்மன் கில் அதைக் கற்றுக்கொள்ளலாம்- கேரி கிரிஸ்டன் அறிவுரை!

ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பிங் செய்வதில் சிக்கலா?.. இந்திய அணிக்குப் பின்னடைவு!

அடுத்த கட்டுரையில்
Show comments