Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரூ. 76 லட்சம் செலவு செய்து கொடுத்த சச்சின் - மகிழ்ச்சியில் பள்ளி நிர்வாகம்

ரூ. 76 லட்சம் செலவு செய்து கொடுத்த சச்சின் - மகிழ்ச்சியில் பள்ளி நிர்வாகம்
, திங்கள், 13 ஜூன் 2016 (16:39 IST)
இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் மேற்கு வங்க பள்ளி ஒன்றிற்கு ரூ. 76 லட்சம் செலவில் புதிய வசதிகள் செய்து கொடுத்துள்ளார்.
 

 
மேற்கு வங்க மாநிலம் மிட்னாபூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய பள்ளி உள்கட்டுமான வசதியின்றி சிரமப்பட்டு வந்துள்ளது. இது குறித்து ராஜ்யசபா எம்.பி.யும், முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவானுமான சச்சின் டெண்டுல்கருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
 
webdunia

 
அதன் பேரில், சச்சின் டெண்டுல்கர் தனது உள்ளூர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 70 லட்சத்திற்கும் நிதியை அளித்துள்ளார். மேலும், நூலகம், ஆய்வுகூடங்கள் மற்றும் மகளிருக்கு பொது அறைக்கான கட்டுமான பணிகளுக்கான உதவிகளையும் செய்து கொடுத்துள்ளார். இதனை அந்த பள்ளிக்கே நேரடியாக வந்து செய்துள்ளார்.
 
இது குறித்து கூறியுள்ள பள்ளியின் தலைமையாசிரியர் உத்தம் குமார் மொஹந்தி, ”இந்த உணர்களில் இருந்தே இன்னும் வெளியே வரவில்லை. எங்களது நன்றியை தெரிவிக்க எங்களுக்கு வார்த்தைகளே இல்லை” என்றார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சுருண்டது ஜிம்பாப்வே : 126 ரன்களுக்கு ஆல் அவுட்