Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொல்கத்தா அணியை வாங்கினார் சவுரவ் கங்குலி.. குவியும் வாழ்த்துக்கள்..!

Siva
வெள்ளி, 12 ஜூலை 2024 (12:17 IST)
இந்திய ரேசிங் திருவிழா 2024 போட்டிகள் வரும் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பரில் நடைபெற உள்ள நிலையில் இந்த போட்டியில் கலந்து கொள்ள இருக்கும் அணிகளில் ஒன்றான  கொல்கத்தா ராயல் டைகர்ஸ் என்ற அணியை சவுரவ் கங்குலி வாங்கியுள்ளார்.

இந்திய ரேசிங் திருவிழா 2024 போட்டிகள் வரும் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பரில் நடைபெறவுள்ளது.  இந்தியன் ரேசிங் லீக் மற்றும் பார்முலா 4 இந்தியன் சாம்பியன்ஷிப் ஆகிய இரண்டு சாம்பியன்ஷிப்களை உள்ளடக்கிய இந்த போட்டியில் சென்னை, டெல்லி, கோவா, கொச்சி, அகமதாபாத் என மொத்தம் 8 அணிகள் பங்கேற்கின்றன.

இந்நிலையில் இந்த போட்டியில் கொல்கத்தா ராயல் டைகர்ஸ் எனும் அணி அறிமுகமாகும் நிலையில் அந்த அணியை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மற்றும்  பிசிசிஐ முன்னாள் தலைவர் சவுரவ் கங்குலி வாங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  

ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் கொல்கத்தா கிரிக்கெட் அணியை நடிகர் ஷாருக்கான் வாங்கி உள்ள நிலையில் கார் பந்தய அணியை சவுரவ் கங்கு வாங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அணியை கங்குலி வாங்கி உள்ளதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

Edited by Siva
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

‘கிரிக்கெட்டர் அஸ்வின்’ இன்னும் ஓய்வு பெறவில்லை… சென்னையில் அஸ்வின் நெகிழ்ச்சி!

என்னைக் கேட்காமல் எப்படி வீடியோ எடுக்கலாம்… பத்திரிக்கையாளரின் செயலால் கோபமான கோலி!

சென்னை வந்த அஸ்வினுக்கு மக்கள் உணர்ச்சிபூர்வ வரவேற்பு!

தொடரின் பாதியிலேயே ஓய்வை அறிவிக்க இதுதான் காரணமா.. அஸ்வினுக்கு நேர்ந்த அவமரியாதை!

ரோஹித் ஷர்மாவும் ஓய்வு முடிவை அறிவிப்பார்… சுனில் கவாஸ்கர் ஆருடம்!

அடுத்த கட்டுரையில்
Show comments