Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தோனியை பிசிசிஐ சரியாக நடத்தவில்லை: பாகிஸ்தான் வீரர் குற்றச்சாட்டு

தோனியை பிசிசிஐ சரியாக நடத்தவில்லை: பாகிஸ்தான் வீரர் குற்றச்சாட்டு
, ஞாயிறு, 23 ஆகஸ்ட் 2020 (17:12 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தல தோனி கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இதனை அடுத்து உலகெங்கிலுமிருந்து கிரிக்கெட் வீரர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்ததோடு தோனி இல்லாத இந்திய அணி குறித்து கவலை தெரிவித்தனர் 
 
இந்த நிலையில் பாகிஸ்தான் அணியின் சுழல்பந்து வீச்சாளர் சாக்லைன் முஷ்டாக் அவர்கள் சமீபத்தில் அளித்த பேட்டியில் ’நான் எப்போதும் நேர்மறையான எண்ணங்களை மட்டுமே பேசக் கூடிய நபராக இருப்பேன். ஆனால் இப்போது நான் முதல் முறையாக ஒரு விஷயத்தை சொல்லியே ஆகவேண்டும். பிசிசிஐக்கு இது ஒரு மிகப்பெரிய தோல்வி. தோனி போன்ற மிகப்பெரிய வீரர்களை அவர்கள் சரியாக நடத்தவில்லை அவருடைய ஓய்வு இவ்வாறு முடிந்து இருக்கக் கூடாது 
 
இதை என்னுடைய இதயத்தில் இருந்து சொல்கிறேன். நான் நினைப்பதையே அவரின் கோடிக்கணக்கான ரசிகர்களும் கூறுகின்றார்கள். பிசிசிஐயிடம் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். நீங்கள் தோனியை சரியாக நடத்தவில்லை என்று என் மனதில் தோன்றுகிறது என்று கூறியுள்ளார்
 
இருப்பினும் ஐபிஎல் போட்டியில் தோனி விளையாடுகிறார் என்பது சந்தோசம் தான். ஆனால் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு என்பது இன்னும் பிரமாண்டமாக இருந்திருக்க வேண்டும் என்று சாக்லைன் முஷ்டாக் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒரு இரட்டைச்சதம், ஒரு சதம்: 583 ரன்கள் குவித்த இங்கிலாந்து