வெளியானது சானியா மிர்சாவின் குழந்தை புகைப்படம்...

சனி, 3 நவம்பர் 2018 (18:23 IST)
கடந்த 2010ல் பாகிஸ்தான் கிரிகெட் வீரரை திருமணம் செய்து கொண்டார் டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா. இதனை தொடர்ந்து இந்த வருடம் ஏப்ரல் மாதம் தான் கர்ப்பமாக உள்ளதாக கூறினார். அதன் பின் அக்டோபர் 30 ஆம் தேதி ஹைதராபாத்தில் உள்ள ஒரு பிரபல மருத்துவமனையில் அவருக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்தது.
தந்தையின் பெயரைக் குடும்பப் பெயராக வைக்கும் பழக்கத்தை அவர் மரபு வழியாக பின்பற்றாமல் கணவர் சோயிப்மாலிக் பெயரையும் தன் பெயரையும் இணைத்து ’மிர்சாமாலிக் ’என்ற பெயரை முதலில் இருவரும் ஊடகத்திற்கு தெரிவித்திருந்தனர்.
 
இந்நிலையில் குழந்தையுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சானியா, இன்று தன் கைக்குழந்தையுடன் வீட்டுக்கு செல்லும்  காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் விராட் கோலியை புகழ்ந்த கிரேட் ஸ்மித்