சாம்பியன்ஸ் டிராபி போட்டி இங்கிலாந்தில் நடைபெற்று வரும் நிலையில், இந்தியா- இலங்கை இடையேயான போட்டி நாளை நடைபெறவுள்ளது.
இது குறித்து இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சங்கக்கரா பேட்டி அளித்துள்ளார். அவர் கூறியதாவது, இந்தியாவுக்கு எதிராக நாளை நடைபெறும் லீக் ஆட்டத்தில் இளம் வீரர்களை கொண்ட இலங்கை அணி கர்வத்துடனும், திமிருடனும் விளையாட வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும், இலங்கை அணி ஆக்ரோஷமாக விளையாடினால், இந்திய அணிக்கு அதிர்ச்சி அளிக்கலாம். அதே நேரத்தில் இலங்கை அணி ரன்ரேட் விகிதத்தை உயர்த்த முயற்சிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.