Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெண் வீராங்கனையின் சவாலை ஏற்று பேட்டிங் செய்த சச்சின் !

Webdunia
ஞாயிறு, 9 பிப்ரவரி 2020 (14:22 IST)
பெண் வீராங்கனையின் சவாலை ஏற்று பேட்டிங் செய்த சச்சின்

கிரிக்கெட் விளையாட்டில் டாட் பிராட்மேன்க்கு பிறகு அனைத்து நாட்டு கிரிக்கெட் ரசிகர்களாலும் பிரமிப்புடன் பார்க்கப்படுபவர் சச்சின்.இவர் , இமாலய சாதனைகளைச் செய்துவிட்டு, சில வருடங்களுக்கு முன் அனைத்துவித கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விட்டார். 
 
இந்நிலையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீராங்கனை பெர்ரியின் சவாலை ஏற்று ஒரே ஒரு ஓவர் மட்டுமே கிரிக்கெட் விளையாட ஒப்புக்கொண்டார்.
 
 
ஆஸ்திரேலியா நாட்டில் சில நாட்களுக்கு முன் காட்டுத் தீ பரவியது. இந்த தீ பாதிப்புகளுக்கு நிதி திரட்டுவதற்காக மெல்போர்னில் நாளை காட்சி கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ளது.
 
இதில், ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் ரிக்கி பாண்டிங் அணிக்கு சச்சின் டெண்டுல்கர் கேப்டன். இந்தப் போட்டிக்கு இடையில் ஒரே ஒரு ஓவரை எதிர்கொள்ள ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் வீராங்கனை எல்லிஸ் பெர்ரி டுவீட் பதிவிட்டிருந்தார்.
 
இந்த சவாலை ஏற்றுக்கொண்டு, டெண்டுல்கர் தோள்பட்டை காரணமாக பேட்டிங் செய்யக் கூடாது என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். ஆனால் ஒரே ஓவர் என்பதால் அதற்கு சச்சின் சம்மத்தித்து சவாலை ஏற்றுக்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்நிலையில், இன்று நடைபெற்ற ஒரு ஒவர் சவாலில் பெண் வீராங்கனை வீசிய பந்தினை எதிர்கொண்ட சச்சின்,தனது அசத்தலான  மாஸ்டர் பேட்டிங் பிளஸ் தனது மாஸ் ஸ்டைலுடன் அதே ஃபார்மில் பேட்டிங் செய்து சாவாலை வென்று காட்டினார். 
 
ஐசிசி அமைப்பு, சச்சின் பேட்டிங் செய்யும் வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளது. சுமார் 6 லட்சத்திற்கும் அதிகமானவர்களால் பார்க்கப்பட்டு பகிரப்பட்டு வைரல் ஆகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

ஐபிஎல் திருவிழா… சென்னையில் இன்று சி எஸ் கே வை எதிர்கொள்ளும் பஞ்சாப்…!

மும்பை இந்திய்ன்ஸ் கிட்ட எவ்ளோ வாங்குனீங்க? நடுவரை வறுத்தெடுத்தும் ரசிகர்கள்… எல் எஸ் ஜி வீரரின் ரன் அவுட்டில் கிளம்பிய சர்ச்சை!

டி 20 உலகக் கோப்பை தொடர்… ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித்துக்கு வாய்ப்பில்லை!

தோல்விக்கு இதுதான் காரணம்… மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா!

ப்ளே ஆஃப் சுற்றுக்கு லீவ் லெட்டர் கொடுக்கும் இங்கிலாந்து வீரர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments