ஒரு ஓவர் பேட்டிங்... சவாலை ஏற்றார் சச்சின் ...

Webdunia
சனி, 8 பிப்ரவரி 2020 (15:35 IST)
ஒரு ஓவர் பேட்டிங் சவாலை ஏற்றார் சச்சின்
கிரிக்கெட் விளையாட்டில் டாட் பிராட்மேன்க்கு பிறகு அனைத்து நாட்டு கிரிக்கெட் ரசிகர்களாலும் பிரமிப்புடன் பார்க்கப்படுபவர் சச்சின்.இவர் , இமாலய சாதனைகளைச் செய்துவிட்டு, சில வருடங்களுக்கு முன் அனைத்துவித கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விட்டார்.  இந்நிலையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீராங்கனை பெர்ரியின் சவாலை ஏற்று ஒரே ஒரு ஓவர் மட்டுமே கிரிக்கெட் விளையாட ஒப்புக்கொண்டுள்ளார்.
 
ஆஸ்திரேலியா நாட்டில் சில நாட்களுக்கு முன் காட்டுத் தீ பரவியது. இந்த தீ பாதிப்புகளுக்கு நிதி திரட்டுவதற்காக மெல்போர்னில் நாளை  காட்சி கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ளது.
 
இதில், ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் ரிக்கி பாண்டிங் அணிக்கு சச்சின் டெண்டுல்கர் கேப்டன். இந்தப் போட்டிக்கு இடையில் ஒரே ஒரு ஓவரை எதிர்கொள்ள ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் வீராங்கனை  எல்லிஸ் பெர்ரி டுவீட்  பதிவிட்டுள்ளார்.
 
இந்த சவாலை ஏற்றுக்கொண்டு, டெண்டுல்கர் தோள்பட்டை காரணமாக பேட்டிங் செய்யக் கூடாது என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். ஆனால் ஒரே ஓவர் என்பதால் அதற்கு சச்சின் சம்மத்தித்து சவாலை ஏற்றுக்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடர்: கேப்டனாக கே.எல். ராகுல்; மீண்டும் அணியில் ருதுராஜ் !

முத்துசாமி செஞ்சுரி.. மார்கோ 93 ரன்கள்.. 500ஐ நெருங்கியது தெ.ஆப்பிரிக்காவின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோர்..!

2 நாட்களில் முடிந்த ஆஷஸ் டெஸ்ட்.. ஆஸ்திரேலியாவுக்கு $3 மில்லியன் இழப்பு..!

ஆஷஸ் முதல் டெஸ்ட்.. ஆஸ்திரேலியா அபார வெற்றி.. 10 வீழ்த்தி வெற்றிக்கு வித்திட்ட ஸ்டார்க்..!

2வது இன்னிங்ஸில் இங்கிலாந்து ஆல்-அவுட்.. ஆஸ்திரேலியா வெற்றி பெற டார்கெட் எவ்வளவு?

அடுத்த கட்டுரையில்
Show comments