Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சச்சினுக்கு லாரா ஓய்வுநாளில் அளித்த பரிசு – வெளியிட்ட வீடியோ!

Advertiesment
சச்சினுக்கு லாரா ஓய்வுநாளில் அளித்த பரிசு – வெளியிட்ட வீடியோ!
, செவ்வாய், 17 நவம்பர் 2020 (16:56 IST)
இந்திய அணியின் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று 7 ஆண்டுகள் நிறைவாகியுள்ளன.

இந்தியாவில் கிரிக்கெட் ஒரு மதம்.. அந்த மதத்துக்கு சச்சின்தான் கடவுள் என்றால் அது மிகையில்லை. 90 களில் பிறந்த எந்த வொரு இளைஞருக்கும் சச்சின்தான் ஆதர்ஸம். இந்தியாவில் உள்ள எல்லா 90ஸ் கிட்ஸ்களின் சச்சின் பயன்படுத்திய எம் ஆர் எஃப் பேட் இருந்திருக்கும். அந்த அளவுக்கு ஒரு தலைமுறையையே வசப்படுத்திய சச்சின் கடந்த 2013 ஆம் ஆண்டு இதே நாளில்தான் சர்வதேசக் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்றார்.

தனது கடைசி டெஸ்ட்டை தனது தாய் மற்றும் பயிற்சியாளருக்காக மும்பையில் நடத்த சொல்லி அவர் வைத்த வேண்டுகோளை அடுத்து மும்பை வான்கடே மைதானத்தில் வெஸ்ட் இண்டீஸூக்கு எதிராக நடந்தது. ஆனால் போட்டி மூன்றே நாட்களில் முடிய சச்சினுக்கு விடை கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த கொண்டாட்டங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. சர்வதேசக் கிரிக்கெட்டில் மொத்தம் 24 ஆண்டுகள் விளையாடிய சச்சின் விடைபெற்று இன்றோடு 7 ஆண்டுகள் ஆனதை அடுத்து ரசிகர்கள் பலரும் இதை நினைவு கூர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் ரசிகர்களின் அன்பு மழையில் நனைந்த சச்சின் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் சரியாக 7 ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாளில் லாரா, கெய்ல் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் ஒரு ஸ்டீல் டர்ம்ஸை பரிசாக அளித்தனர் எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஏலத்துக்கு முன்னர் தோனியை சிஎஸ்கே விடுவிக்க வேண்டும் – ஆகாஷ் சோப்ரா சொல்லும் யோசனை!