Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தென்னாப்பிரிக்கா-மேற்கிந்திய போட்டி கைவிடப்பட்டது!

Webdunia
திங்கள், 10 ஜூன் 2019 (21:04 IST)
இன்று நடைபெறுவதாக இருந்த தென்னாப்பிரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் 15வது லீக் ஆட்டம் மழை காரணமாக கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்தளிக்கப்பட்டது
 
முன்னதாக டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் பீல்டிங் செய்ய முடிவு செய்ததால் தென்னாப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி 7.3 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை இழந்து 29 ரன்கள் எடுத்திருந்த நிலையில் திடீரென மழை குறுக்கிட்டதால் போட்டி நிறுத்தப்பட்டது. இங்கிலாந்து நேரப்படி காலை 11 மணிக்கு தொடங்கிய மழை விட்டுவிட்டு பெய்ததால் மாலை 4 மணிக்கு போட்டி கைவிடப்பட்டதாக அதிகாரபூர்வமாக நடுவர்கள் மூலம் அறிவிக்கப்பட்டது.
 
மழையால் கிடைத்த இந்த ஒரு புள்ளிதான் தென்னாபிரிக்காவுக்கு கிடைத்த முதல் புள்ளியாகும். ஏற்கனவே மேற்கிந்திய தீவுகள் அணி ஒரு போட்டியில் வென்றுள்ளதால் இந்த அணி மொத்தம் 3 புள்ளிகளை பெற்றுள்ளது. மொத்தம் ஒன்பது போட்டிகள் மட்டுமே உள்ள நிலையில் மீதியுள்ள ஐந்து லீக் போட்டிகளிலும் தென்னாபிரிக்கா வென்றே ஆகவேண்டிய கட்டாய நிலை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

இளம் வீரர்கள் அதிரடியால் இமாலய இலக்கை நிர்ணயித்த டெல்லி… துரத்திப் பிடிக்குமா ராஜஸ்தான்?

டாஸ் வென்ற ராஜஸ்தான் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

ஐபிஎல்ல தடுமாறலாம்.. உலகக்கோப்பைன்னு வந்தா அவர் ஹிட்மேன்தான்! – யுவராஜ் சிங் நம்பிக்கை!

ப்ளே ஆஃப் செல்ல கடைசி வாய்ப்பு… ராஜஸ்தானை இன்று எதிர்கொள்ளும் டெல்லி கேப்பிடல்ஸ்!

தோனிக்கு இந்த பிரச்சனை இருக்கு… அதனால்தான் அவர் கடைசியில் விளையாடுகிறார் – சிஎஸ்கே அணி தரப்பு தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments