சென்னை அணியின் ஓப்பனர் ருத்துராஜ் கெய்க்வாட் இந்த சீசனில் 600 ரன்களைக் கடந்துள்ளார்.
சிஎஸ்கே அணியின் இந்த சீசனுக்கான வெற்றியில் தொடக்க ஆட்டக்காரரான ருத்துராஜ் கெய்க்வாட்டுக்கு மிகப்பெரிய பங்குண்டு. நேற்றைய வெற்றியிலும் முக்கியமானக் கட்டத்தில் 70 ரன்களை சேர்த்தார். இந்நிலையில் நேற்று அவர் இந்த சீசனில் 600 ரன்களைக் கடந்த இரண்டாவது வீரர் ஆனார். கே எல் ராகுல் 626 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார். ருத்துராஜ் 602 ரன்கள் சேர்த்துள்ளார்.
சென்னை அணிக்காக இதற்கு முன்னர் மைக் ஹஸ்ஸி மற்றும் அம்பாத்தி ராயுடு ஆகியோர் இந்த சாதனையைப் படைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.