Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரன் எடுத்தவரை புகழ்ந்து ரன் கொடுத்தவரை மறந்தாச்சு...

Advertiesment
ரன் எடுத்தவரை புகழ்ந்து ரன் கொடுத்தவரை மறந்தாச்சு...
, செவ்வாய், 20 மார்ச் 2018 (16:19 IST)
இலங்கையில் நடைபெற்ற முத்தரப்பு டி20 தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா - வங்காள தேச அணிகள் மோதின. இதில் இந்திய அணி த்ரில் வெற்றி பெற்றது. 
 
இந்திய அணியின் வெற்றிக்கு கடைசி 3 ஓவரில் 35 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால், கடைசி இரண்டு ஓவர்கள் மிகவும் விறுவிறுப்பாக சென்றது. 
 
போட்டியின், 18 வது ஓவரை முஷ்டாபிஜூர் ரஹ்மான் வீசினார். லெக் பை மூலம் ஒரு ரன் மட்டுமே கொடுத்து ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார். கடைசி இரண்டு ஓவரில் 34 ரன்கள் தேவைப்பட்டது. 
 
19 வது ஓவரை ருபெல் ஹொசைன் வீசினார். இவர் அனுபவ வீரர் என்பதால் அதிகபட்சம் 15 ரன்கள் விட்டுக்கொடுத்தாலும், போட்டியில் வென்ரு விடலாம் என வங்கதேச அணி கணக்கு போட்டது. 
 
இப்போதுதான் தினேஷ் கார்த்திக் களமிறக்கினார். ருபெல் ஹொசைன் வீசிய பந்துகளில் ஒன்ரை மட்டும் விட்டுவிட்டு அந்த ஓவரில் 22 ரன்கள் அடித்தார். இந்த அணியில் வெற்றிக்கு இந்த ஓவர் முக்கிய திருப்புமுனையாக இருந்தது. 
 
அதேபோல், வங்கதேசத்தின் தோல்விக்கும் இது முக்கிய காரணமாக இருந்தது. எனவே, முக்கியமான ஓவரில் 22 ரன்கள் விட்டுக்கொடுத்த ருபெல் ஹொசைன் வங்காள தேச ரசிகர்களிடம் மன்னிப்பு  கேட்டு வருந்தியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தினேஷ் கார்த்திக்கை புத்திசாலிதனமாக களமிறக்கிய ரோகித் சர்மா