தீயாய் நடந்த 90 நிமிட ஆட்டம்! மெஸ்சி அணியை வீழ்த்திய ரொனால்டோ!

Webdunia
புதன், 9 டிசம்பர் 2020 (11:09 IST)
ஐரோப்பாவின் புகழ்பெற்ற யுஇஎஃப்ஏ சாம்பியன்ஸ் லீக் போட்டியில் மெஸ்சியின் பார்சிலோனா அணியை வீழ்த்தியது ரொனால்டோவின்  ஜுவெண்டஸ் அணி.

ஐரோப்பாவின் புகழ்பெற்ற யுஇஎஃப்ஏ சாம்பியன்ஸ் லீக் போட்டிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில் பார்சிலோனா அணிக்கும், ஜுவெண்டஸ் அணிக்கும் இடையேயான போட்டி நேற்று பார்சிலோனாவின் கேம்ப் நௌவில் நடந்தது. உலக புகழ்பெற்ற கால்பந்து வீரர்களான லியோனல் மெஸ்சி, க்ரிஸ்டினோ ரொனால்டோ ஆகியோர் எதிரெதிர் அணியில் விளையாடுவதால் இந்த ஆட்டம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. இதில் ஆரம்பம் முதலே பார்சிலோனா அணி சிறப்பாக விளையாடினாலும் அவர்களை கோல் போட விடாமல் ஜுனெண்டஸ் அணி தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வந்தது.

முதல் 13வது நிமிடத்தில் ஜுவ்னெடஸ் அணியின் ரொனால்டோ ஒரு கோல் போட ஆட்டத்தின் போக்கை ஜுவெண்டஸ் கைக்குள் கொண்டு வந்தது. தொடர்ந்து பார்சிலோனாவின் முயற்சிகளை முறியடித்து 0-3 என்ற கோல் கணக்கில் வென்றது ஜுவெண்டஸ். அணிக்காக இரண்டு கோல்கள் போட்ட ரொனால்டோ ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். மெஸ்சி ஒரு கோலாவது போட்டு விடுவார் என எதிர்பார்த்த அவரது ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெஸ்ட் கிரிக்கெட்: இரட்டை சதத்தை நெருங்கினார் ஜெய்ஸ்வால் !

ஐபிஎல் கப் அடிச்சே ஆகணும்! மனதை கல்லாக்கி சிஎஸ்கே எடுத்த முடிவு! முக்கிய வீரர்கள் விடுவிப்பு?

மே.இ.தீவுகளுக்கு எதிரான 2வது டெஸ்ட்.. ஜெய்ஸ்வால் அபார சதம்.. சாய் சுதர்சன் அரைசதம்.. ஸ்கோர் விவரங்கள்..!

ரோஹித்துக்கு நடப்பது, எனக்கும் நடந்தது… ஷுப்மன் கில்லை முன்னிறுத்துவது குறித்து கங்குலி கருத்து!

ரசிகர்களோடு பேச மொழி தடையாக இருந்தது இல்லை… தோனி பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments