“விராட் கோலிக்கு துணையாக இருப்போம்…” கேப்டன் ரோஹித் ஷர்மா ஆதரவு!

Webdunia
செவ்வாய், 12 ஜூலை 2022 (10:34 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி மிகவும் மோசமான ஆட்டத்திறனில் இப்போது இருக்கிறார்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி கடந்த இரண்டு ஆண்டுகளாக மிக மோசமான ஃபார்மில் இருக்கிறார். இதனால் அவர் மீதான விமர்சனங்கள் அதிகளவில் எழுந்துள்ளன. பலரும்  விராட் கோலி தன்னுடைய உச்சத்தை கடந்துவிட்டார். அவரால் இனிமேல் மீண்டும் பழைய கோலியாக விளையாட முடியாது எனக் கூறி வருகின்றனர்.

தற்போது இங்கிலாந்தில் நடந்து வரும் போட்டிகளிலும் கோலி சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றி வருகிறார். இந்நிலையில் இந்திய அணியின் கேப்டன் கோலி குறித்து பேசும்போது “ நாங்கள் அவருக்கு துணையாக இருப்போம். அவர் தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கு மேலாக சீராக விளையாடி வருகிறார். ஒரு தொடர் அல்லது சில போட்டிகள் எல்லோருக்கும் மோசமாக அமையும். அவரது பேட்டிங் தரத்தில் எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026 உலகக் கோப்பை கால்பந்து: 42 அணிகள் தகுதி! முழு விவரங்கள்..!

இந்தியா - வங்கதேச மகளிர் கிரிக்கெட் தொடர் ஒத்திவைப்பு! ஷேக் ஹசீனா விவகாரம் காரணமா?

அவர்கள் மேல் கம்பீர் நம்பிக்கை வைக்க வேண்டும்… கங்குலி அட்வைஸ்!

கேப்டன் ஷுப்மன் கில் இரண்டாவது போட்டியில் விளையாடுவது சந்தேகம்… !

மீண்டும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளரான சங்ககரா!

அடுத்த கட்டுரையில்
Show comments