ஹிட்மேன் இல்லாத ஒருநாள் தொடர் – இந்தியாவுக்கு பெரும் பின்னடைவு !

Webdunia
திங்கள், 3 பிப்ரவரி 2020 (20:08 IST)
நியுசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து இந்திய அணியின் துணைக்கேப்டன் ரோஹித் ஷர்மா தசைப் பிடிப்புக் காரணமாக விலகியுள்ளார்.

நியுசிலாந்தில் டி 20 போட்டிகளை முடித்துள்ள இந்தியா அடுத்ததாக 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடஇருக்கிறது. இந்நிலையில் இந்தியாவுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் விதமாக இந்திய அணியின் துணைக்கேப்டன் ரோஹித் ஷர்மா காயம் காரணமாக விலகியுள்ளார்.

கடைசியாக நடந்த டி 20 போட்டியின் போது ரன் எடுக்க ஓடிய போது ரோஹித் ஷர்மா காலில் தசைப் பிடிப்புக் காரணமாக பாதியிலேயே களத்தில் இருந்து வெளியேறினார். அதன் பின் பந்துவீச்சின் போதும் அவர் களத்துக்கு வரவில்லை.

இந்நிலையில் அவருக்கு ஏற்பட்ட காயம் முழுதாக குணமடையாததால் அவர் 5 ஆம் தேதி நடக்கும் ஒருநாள் தொடரில் இருந்து விலகிக் கொண்டுள்ளார். இந்திய அணிக்கு இது மிகப்பெரிய பின்னடைவாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சச்சின் படைக்காத 3 டெஸ்ட் சாதனைகள்: ஜோ ரூட் முறியடித்தது எப்படி?

ரோஹித் ஷர்மா, விராட் கோலியை வைத்து குழப்பம் செய்யாதீர்கள்: ரவி சாஸ்திரி கண்டனம்..!

358 ரன்கள் எடுத்தும் தோல்வி ஏன்? கேப்டன் கே.எல்.ராகுல் கூறும் காரணம்..!

அதிக சதமடித்து சாதனை: சச்சின் சாதனையை முறியடித்த விராத் கோஹ்லி..

கோஹ்லி, ருத்ராஜ் சதம் வீண்.. கடைசி ஓவரில் தென்னாப்பிரிக்கா த்ரில் வெற்றி..

அடுத்த கட்டுரையில்
Show comments