Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சதமடித்து அசத்திய ரோஹித் ஷர்மா… வலுவான நிலையில் இந்தியா!

Webdunia
சனி, 13 பிப்ரவரி 2021 (15:11 IST)
இந்திய அணி சற்று முன்னர் வரை 212 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்து வலுவான நிலையில் உள்ளது.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கியுள்ளது. முதல் டெஸ்ட் தோல்விக்குப் பின்னர் இந்திய அணியில் பூம்ரா, நதீம் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் நீக்கப்பட்டு அக்ஸர் படேல், குல்தீப் யாதவ் மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

டாஸ் வென்று பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணியில் கில் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அதைத் தொடர்ந்து வந்த புஜாரா நிதானமாக விக்கெட்டை விட்டுக்கொடுக்காமல் ஆட ரோஹித் ஷர்மா அதிரடியாக விளையாடி சதம் அடித்தார். புஜாரா 14 ரன்களும் கேப்டன் கோலி டக் அவுட் ஆகியும் ஏமாற்றம் அளித்தனர். அதன் பின்னர் வந்த அஜிங்க்யே ரஹானே ரோஹித்துடன் கூட்டணி அமைத்து அணியை சரிவில் இருந்து மீட்டார். தற்போது வரை இந்திய 212 ரன்கள் சேர்த்து 3 விக்கெட்களை இழந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் விளையாடும் பவுலர்களுக்கு உளவியல் ஆலோசனை தரவேண்டும்- அஸ்வின் கருத்து!

கோலி, ரோஹித் ஆகியோரை A+ பிரிவில் இருந்து நீக்க பிசிசிஐ ஆலோசனையா?

என்னடா இது ரியான் பராக்குக்கு எல்லாம் ரசிகரா?... திட்டமிட்டு செய்யப்படும் PR வேலையா?

கிரிக்கெட் என்ற பெயரையே ‘பேட்டிங்’ என மாற்ற வேண்டியதாக இருக்கும்- ரபாடா புலம்பல்!

சக்கர நாற்காலியில் வந்து வீரர்களுக்கு ஆலோசனைக் கொடுத்த டிராவிட்!

அடுத்த கட்டுரையில்
Show comments